Karthik Sent Divorce Notice To Chandrakala : சந்திரகலாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி அதில் கையெழுத்தும் போட வைத்து கார்த்திக் ராஜா தனது வேலையை காட்டிவிட்டார்.
கார்த்தியின் பிளான் ஏ – சந்திரகலாவிற்கு ஆப்பு வச்ச கார்த்திக் – விவாகரத்து பேப்பரில் கையெழுத்து!
Karthik Sent Divorce Notice To Chandrakala : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற துடிக்கும் சந்திரகலாவை இப்போது கார்த்திக் வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம் போட்டுள்ளார். அதற்கான காய் நகர்த்தவும் ஆரம்பித்துவிட்டார். அதன் முதல் கட்டமாக அவரது கணவர் சிவனாண்டி விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவது போன்று சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
25
பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற சாமுண்டீஸ்வரி
திருமணத்திற்கு பிறகு சந்திரகலா தனது கணவர் வீட்டிற்கு செல்லாமலே அக்காவின் வீட்டிலேயே இருந்துள்ளார். இருந்தாலும் அக்காவின் வீட்டிற்கு தெரியாமல் கணவருடன் திருட்டுத்தனமாக பேசி வந்துள்ளார். இதை எப்படியோ கார்த்திக் வந்த உடனே கண்டுபிடித்துவிட்டார். அதன் பிறகு கணவரும், மனைவியுமாக சிவனாண்டி மற்றும் சந்திரகலா இருவரும் அடுத்தடுத்து பிளான் போட்டு வந்தனர். கடைசியில் கார்த்திக்கே வெற்றி பெற்று வந்துள்ளார்.
35
ரேவதி, கார்த்திக், சாமுண்டீஸ்வரி
கோயில் கும்பாபிஷேகத்திற்குள் கார்த்திக்கை வீட்டைவிட்டு துறத்த சந்திரகலா பிளான் போட்டு வரும் நிலையில், அதற்குள்ளாக சந்திரகலாவை இந்த வீட்டிலிருந்து அனுப்ப கார்த்திக்கும் திட்டம் போட்டார். அதன் முதல் கட்டமாக இப்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது எப்படி சாத்தியம் என்றெல்லாம் கேட்க கூடாது. பழமொழி சொன்னால் அனுபவிக்கனுமே தவிர ஆராயக் கூடாது என்று சொல்வது போன்று சீரியலில் இதெல்லாம் நடக்கும்.
45
கார்த்திகை தீபம் 2 சீரியல்
சிவனாண்டி மனைவிக்கு கார்த்திக் எப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடியும். கிளைண்ட் சார்பாக வழக்கறிஞர் சம்பந்தப்பட்டவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பலாம். அதன்படி தான் கார்த்திக்கும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை முதலில் வாங்கிய மயில்வாகனம் பதற்றத்துடன் மாமா ராஜராஜனிடம் சொல்ல, அவர் ரோகிணியிடம் தெரியப்படுத்த, இப்படி குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் தெரிந்து கொண்டனர்.
55
கார்த்திகை தீபம் சீரியல்
கடைசியில் சாமுண்டீஸ்வரியும் தெரிந்து கொண்டார். அதில், இத்தனை நாட்கள் இது எனக்கு தெரியாமல் போய்விட்டது. சரி, சந்திரகலா நீ சைன் போட்டு என்று சொல்ல, இந்த நாடகத்தை பற்றி அறிந்து கொண்ட சந்திரகலா வேறு வழியே இல்லாமல் சைனும் போட்டுள்ளார். இது ஒரு புறம் இருக்க அடுத்து துர்கா கல்யாணத்தை வைத்து நாடகம் போடுகிறார்கள். அதாவது, துர்கா கல்யாணத்தை நினைத்து கவலைப்பட கார்த்தி உனக்கும் நவீனுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறாட். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி வீட்டில் பந்த கால் நிகழ்ச்சி தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கும் என்பது பற்றி இன்றைய தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.