இந்த நிலையில் தான் இப்போது சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவைத் தவிர மற்ற அனைவரும் பாட்டி வீட்டில் இருக்கும் நிலையில் நவீன் மற்றும் துர்காவிற்கு ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடுகள் நடக்கிறது. ரேவதி தான் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். கட்டில் அலங்காரம், பூ என்று எல்லாவற்றையும் ரேவதி செய்து கொண்டிருக்க, அங்கு வந்த கார்த்திக்கிடம் ஃபர்ஸ்ட் நைட் பீலிங்ஸ் பற்றி கேட்டு வெக்கப்பட்டார்.
மேலும் ஐ லவ் யூ என்று தனது காதலையும் வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஜீ தமிழ் நிறுவனம் புரோமோவாக வெளியிட்டுள்ளது. அதில் தான் ரேவதி மற்றும் கார்த்திக் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.