எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் இத்தனை நாட்கள் கப்சிப்னு இருந்ததற்கான அதிர்ச்சி தரும் பின்னணி தெரியவந்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தன் கணவர் சக்தி உடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அவர்கள் இருக்கும் இடத்தை ஆலிவர் தேவசகாயம் கண்டுபிடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி தேவசகாயத்துக்கு சொந்தமான பங்களாவில் தான் ஜனனி தங்கி இருக்கிறார். தனக்கு ஆபத்து இருப்பது தெரியாமல் ஜனனி ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். மறுபுறம் வீட்டில் ஒரு பூஜைக்கும் ஏற்பாடு நடக்கிறது. அதற்கு விசாலாட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால் ஆதி குணசேகரன் அந்த பூஜையை நடத்தியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
பூஜைக்கு ஏற்பாடு
வீட்டில் பூஜை நடத்த ஏற்பாடு செய்வது யார் என்பதை சொல்லாமல் மூடி மறைத்த நிலையில், விசாலாட்சி துருவி துருவி கேட்ட பின்னர், ஆதி குணசேகரன் தான் இதை செய்வதாக சொல்லிவிடுகிறார்கள். இதற்கு முன் அவர் ஏற்பாடு செய்த பூஜையால் தான் வீட்டில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கிறது என்றும், அதனால் தற்போது இந்த பூஜைக்கு அனைவரும் சப்போர்ட் பண்ணுமாறும் கதிர் மற்றும் ஞானம் கேட்டுக்கொண்டனர். ஆனால் ஜனனி மற்றும் சக்தி இல்லாவிட்டால் இந்த பூஜையை நடத்த முடியாது என ரேணுகா, நந்தினி ஆகியோர் ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.
34
லீக் ஆன பிளான்
ஜனனி தன்னுடைய வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாட்களை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் இன்னொரு பக்கம் அவருக்கு எதிராக வீட்டுக்குள் இருந்தபடியே சதித்திட்டம் தீட்டி வருகிறார் ஆதி குணசேகரன். இத்தனை நாட்கள் அவர் நல்லவர் வேஷம் போட்டது எதற்காக என்பதன் உண்மை தெரியவந்துள்ளது. ஆதி குணசேகரன் ஏற்பாடு செய்துள்ள இந்த பூஜையே ஜனனியை தீர்த்துக்கட்ட தானாம். அவர் இல்லாமல் இந்த பூஜை நடந்தால் தான் அவளை காலிபண்ண முடியும் என்று அறிவுக்கரசி கூறுகிறார். அவ காலியானா அவளுடைய வயிற்றில் இருக்கும் வாரிசும் காலியாகிவிடும் என கூறி உள்ளார்.
ஆக மொத்தம் ஜனனியின் கதையை முடிக்க தான் இந்த பூஜையை ஏற்பாடு செய்திருக்கிறார் குணசேகரன். ஜனனி இல்லாமல் பூஜை நடத்தினால் தான், அதற்கான பலன் கிடைக்கும் என இவர்கள் இருக்க, மறுபுறம் ஜனனியும் சக்தியும் வராமல் இந்த பூஜையை நடத்தக் கூடாது என ரேணுகா, நந்தினி, விசாலாட்சி ஆகியோர் திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். இதனால் இந்த சதி நிறைந்த பூஜையை ஆதி குணசேகரன் நடத்தினாரா? அல்லது விசாலாட்சி அதை தடுத்து நிறுத்தினாரா? தேவசகாயம் ஜனனியை பழிவாங்கினாரா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.