குணசேகரனின் கோர முகம்; ஜனனியை தீர்த்துக்கட்ட நடக்கும் சதி; உயிர்ப் பயத்தில் ஈஸ்வரி குடும்பம்? எதிர்நீச்சல் அப்டேட்!

Published : Dec 21, 2025, 02:34 PM IST

Gunasekaran Plans Against Janani :எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள் ஜனனியின் வளர்ச்சி குணசேகரனை ஆத்திரமடையச் செய்து வரும் நிலையில் ஆட்களை செட் செய்து ஜனனியை ஒழிக்க ரகசிய திட்டம் தீட்டுகிறார். இதிலிருந்து ஜனனி தப்பித்தாரா இல்லையா என்று பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Serial Janani Danger

சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஜனனியின் வளர்ச்சி குணசேகரனை ஆத்திரமடையச் செய்து வரும் நிலையில் ஆட்களை செட் செய்து ஜனனியை ஒழிக்க ரகசிய திட்டம் தீட்டுகிறார். தமிழ் சோறு என்னும் ஒரு பிசினஸை தொடங்கியுள்ளார் ஜனனி. அதற்கு குணசேகரனால் அடிக்கடி சங்கடங்களும், சோதனைகளும் மனக்கசப்பும் வந்தது அது ஒவ்வொன்றையும் வெற்றியாகவே முன்னேறி கொண்டிருந்தார் ஜனனி. தற்போது குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் கதிர், ஞானம், மற்றும் கரிகாலன் வீடியோ கூட்டணியில் தலை மறவாக இருந்து வந்து ஆக்ஷனில் இறங்கியுள்ளார்.

24
Gunasekaran Plans Against Janani

கொற்றவையின் ஆதரவு:

ஜனனி தமிழ் சோறு பிசினஸ் தொடங்குவதற்கு திறப்பு விழா வைத்திருப்பதால் ஜனனியை சந்திக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் கொற்றவை இவர் வந்து திறப்பு விழா நடப்பதற்கு குணசேகரன் ஏதோ பண்ணப் போகிறார் என்று முன்னெச்சரிக்கையாக கூறிக் கொண்டிருக்கிறார். நாம் திறப்பு விழாவிற்கு போலீஸ் படையை அமைக்க வேண்டும் அதற்கான வேலைகளை பாருங்கள் சக்தி என்று கூற ஜனனி மறுத்து அதெல்லாம் ஒன்று வேண்டாம் நாங்கள் பார்த்துக்கிறோம் என்று மறுக்கிறார். கொற்றவை குணசேகரன் ஏதாவது செய்து விடுவார் என்று பயமுறுத்துகிறார். அதனைக் கேட்டு நந்தினி மற்றும் சக்தி இருவரும் பயந்த நிலையில் இருக்கின்றார்கள்.

34
Ethirneechal Serial Latest Twist Today

இரண்டு நாட்கள் ஒத்தி வைக்கலாமா?

சக்தி ஜனனியிடம் குணசேகரன் இந்த விழாவை நடக்க விடாமல் செய்ய ஏதாவது ஒரு சூழ்ச்சி செய்து செய்வார் எனக்கு பயமாக இருக்கிறது சக்தி என்று கூறுகிறார். நான் அவரு கிட்ட மாட்டுனா போது என்னை நீ ஆள் வைத்து அடித்தவர் குணசேகரன். நம்ம பிசினஸா அவரு தொடங்க விடுவாருன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா என்று ஜனனியிடம் கேள்விகளை கேட்கிறார். நம்ம வேணும்னா இரண்டு நாளைக்கு இந்த விழாவை ஒத்தி வைக்கலாமா என்று சக்தி ஜனன இடம் கேட்கிறார். அதற்கு சக்தி எத்தனை நாள் தான் நம்மளும் பயந்து பின்னாடியே இருக்கிறது கண்டிப்பா இதை ஓபன் என்ன செய்றாரு நம்மளும் பார்க்கலாம் என்று சவாலாக கூறுகிறார் சக்தி.

44
Sun TV Serial Today Episode Promo

அடியாட்களை செட் செய்கிறார் குணசேகரன்:

தமிழ் சோறு திறப்பு விழாவை நடக்க விடாமல் தடுக்க குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் மூவரும் சேர்ந்து அடியாட்களை செட் செய்கிறார். இதை எப்படி நாளும் தடுக்கணும் எங்க பேரு வெளிய வரக்கூடாது என்றெல்லாம் கூறுகிறார் குணசேகரன் தம்பிகள் இருவரும் அவர்களுக்கு சப்போர்ட் செய்கின்றனர். அடியாட்களுக்கு பணத்தை கொடுத்து இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் பிளானை கரெக்டாக செய்ய வேண்டும் என்று கூறுகிறார் இதனால் ஜனனிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது யார் உயிர் போகப் போகிறது என்று ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தொடங்கியது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories