அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!

Published : Dec 17, 2025, 03:52 PM IST

Chamundeshwari Character Exit: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கின் அம்மா அபிராமி இறந்ததற்கு பதிலாக சாமுண்டீஸ்வரி இறந்திருந்தால் சீரியல் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

PREV
17
கார்த்திகை தீபம் சீரியல்

ஜீ5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து ரசிகர்கள் புகார் கொடுக்காத குறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனென்றால் இந்த சீரியலை கோடான கோடி ரசிகர்கள் பார்க்க ஒரே ஒரு காரணம் தான் அது வேறு யாருமில்லை கார்த்திக் ராஜ். நம்ம ஹீரோ தான். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னரே கார்த்திக் ஆபிஸ் என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். அதே போன்று செம்பருத்தி மற்றும் கார்த்திகை தீபம் முதல் பாகம் என்று அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து ஹிட்டும் கொடுத்தார்.

27
அபிராமி

ஆனால், இப்போது அவரது கதாபாத்திரம் காரணமாக ரசிகர்கள் இயக்குரையும், தொலைக்காட்சியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் புரோமோ வீடியோ வெளியாகும் போதும் சரி, சீரியல் ஒளிபரப்பாகும் போதும் சரி ஒரே கமெண்ட்ஸ் தான். சொல்லவே முடியாத அளவிற்கு ரசிகர்களின் கமெண்ட்ஸ் இருக்கிறது. கார்த்திகை தீபம் சீரியலில் வில்லிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோடு, கார்த்திக்கிற்க் டயலாக் கொடுக்கப்படவில்லை. அவரை ஒவ்வொரு காட்சியிலும் சைலண்டாகவே வைத்திருக்கின்றனர்.

37
கார்த்திக் டயலாக்

கூடினால் ஒரு சில டயலாக். அவ்வளவு தான். ஆனால், முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் இந்த சீரியலில் இல்லை. இதில் பற்றாக்குறைக்கு கார்த்திக்கை வீட்டைவிட்டு துரத்திவிட்டதோடு மட்டுமின்றி கார்த்திக் மற்றும் ரேவதி உறவையும் காசு வெட்டிப்போட்டு துண்டித்துவிட்டார். இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் கார்த்திக் ரேவதியை காதலிக்காத மாதிரி நடித்துக் கொண்டார்.

47
கார்த்திக் ரேவதி

பிறகு இப்படியெல்லாம் நடக்கும், அதனால் தான் உன்னிடமிருந்து நால் விலகியே இருக்கிறேன் என்ற உண்மை தெரிந்த பிறகு கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒருவருக்கொருவர் காதல் கொண்டு சந்தோஷமாக ரொமான்ஸாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இப்போது கார்த்திக் உயிரை காப்பாற்ற ரேவதி எடுத்த முடிவு அவரது உயிருக்கே ஆபத்தாகிவிட்டது. இப்படியெல்லாம் நடந்தால் யாரால் தான் சீரியல் பார்க்க முடியும். ஒரு ஆக்‌ஷன், ஒரு ரொமான்ஸ், ஒரு காமெடி காட்சி என்று இருந்தால் தான் பார்க்கும் ஆடியன்ஷூக்கும் சுவாரஸ்யமாகவும், மன நிறைவாகவும் இருக்கும்.

57
இயக்குநர்

ஆனால், இயக்குநர் என்ற தனிமனிதரின் ஒவ்வொரு காட்சியால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி ரசிகர்கள் தான். சீரியல் பார்க்க பார்க்க ஏமாற்றத்தால் மன வேதனை அடையும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் 1063ஆவது எபிசோடு புரோமோவின் போது ரேவதி மருந்து குடிப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சாமுண்டிஸ்வரியால் தான் ரேவதியின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. அவர் இல்லாமல் இருந்திருந்தால் ரேவதியும் கார்த்திக்கும் சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள். அதற்கு கார்த்திக்கின் அம்மா அபிராமி இறந்ததற்கு பதிலாக சாமுண்டீஸ்வரி இறந்திருக்கலாம், அப்படியிருந்தால் சீரியல் இன்னும் நல்லாவே இருந்திருக்கும் என்று கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.

67
சாமுண்டீஸ்வரி

இதே போன்று, சாமுண்டீஸ்வரிக்கும் சந்திராவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வரை இந்த சீரியல் விளங்காது, இது கார்த்திகை தீபம் அல்ல காரி துப்புகிற தீபம் எவன்டா இயக்குனர், முதல்ல அக்கா தங்கை இரண்டு பேரையும் கார்த்தியை மரியாதையா பேச சொல்லு, இந்த சீரியல் பார்க்க பிடிக்க இல்லை தயவுசெய்து சீக்கிரம் சீரியல் முடியும் கொண்டு வரவேண்டும், சாவுங்க யாராவது கேவலமா இருக்கு சீரியல் என்றெல்லாம் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.

77
கார்த்திகை தீபம் இயக்குநர்

இந்த கமெண்ட்ஸ்களை பார்த்தாவது கார்த்திகை தீபம் இயக்குநர் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு கதையும், காட்சியும் அமைத்துக் கொடுத்தால் சீரியலுக்கும் வரவேற்பு கிடைக்கும், தொலைக்காட்சிக்கும் ரேட்டிங் வரும். விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த ரேவதி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories