Janani Sakthi Kodaikanal Tour Romantic Twist in Tamil : எப்போதும் குடும்பப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் ஜனனியின் மன அழுத்தத்தைப் போக்க, சக்தி எடுக்கும் இந்தத் தனிப்பட்ட முயற்சி ரசிகர்களுக்குப் பிடித்துள்ளது.
Janani Sakthi Kodaikanal Tour Romantic Twist in Tamil : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஜனனியை பார்க்க வந்த மதிவதனி அவருக்காக பரிந்து பேசுகிறார். மதிவதனி ஜனனிக்காக பரிந்து பேசுதல்: ஒரு பாதிக்கப்பட்ட பொண்ணா இன்னொரு பொண்ணோட மனநிலையை புரிஞ்சுக்கறதுக்காக உங்ககிட்ட ரெக்வஸ்ட் பண்றேன். கொஞ்ச நாளைக்கு ஜனனி ஓட மனநிலை இப்படித்தான் இருக்கும். அவங்களுக்குள்ள ஏற்படுற ஹார்மோன் இம்பாலன்ஸ் மற்றும் கடந்து வந்த கஷ்டமான பாதை எல்லாம் உங்கள மாத்துறதுக்கு இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும்.
26
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
அதனால் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க. உங்ககிட்ட கோவப்படுற வேண்டாம். நீங்க புரிஞ்சுக்காம உன்கிட்ட பேசிட்டிங்கனா உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னடா உங்க குடும்பத்துக்குள்ள என்ன தலையிடுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. கேஸ் விஷயத்தை நினைச்சு எதுவும் கவலைப்பட வேண்டாம். எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க உங்க பிரச்சனையை கண்டிப்பா தீர்த்து வச்சிடலாம் சரி அப்ப நான் கிளம்புறேன் சக்தி. என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் மதுவதனி.
36
ஜனனி பட்ட கஷ்டங்களை நினைத்து பார்க்கும் சக்தி:
தன்னை கடத்தி கொள்ள நினைத்ததை ஜனனி வந்து காப்பாற்றியதை நினைத்து கண்கலங்குகிறார் சக்தி. ஜனனி சக்தியை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றியதையும் நினைத்து கண்கலங்குகிறார். பிறகு வீட்டுக்குள் சென்று ஜனனியிடம் பேசுகிறார்.
46
வெளியிடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் சக்தி:
ஜனனிடம் சென்று நாம் கொடைக்கானலுக்கு செல்ல வேண்டும் என்று சக்தி சொல்ல ஜனனி கொடைக்கானல் என்று அதிர்ச்சியாக கேட்கிறார். என்ன திடீர்னு சொல்ற எனக்கு ஜனனி கேட்கிறார். வெளிநாட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போயி சுத்தி பாக்கணும்ன்னு ஆசைதான். ஆனா நம்ம புள்ள வந்ததுக்கு அப்புறம் நம்ம சேர்ந்து போலாம் என்று ஆசையாக சொல்கிறார் சக்தி. இப்போ இங்க இருந்து கிளம்புறோம் ஒரு ஒரு வாரம் இல்லைன்னா ஒரு பத்து நாள் ஜாலியா சுத்தி பாத்துட்டு நிம்மதியா இருந்துட்டு வரும் ஜனனி என்று சொல்கிறார் சக்தி அதற்கு ஜனனி சிரித்துக்கொண்டே என்னை கூட்டிட்டு போனால் லோக்கல் உன் பிள்ளையை கூட்டிட்டு போனா ஃபாரினா என்று சிரிப்பாக கேட்கிறார்.
56
னனி சக்தி கொடைக்கானல் பயணம்
அப்படி எல்லாம் இல்ல. குழந்தை வந்தாலும் சரி நீ தான் என் உலகமே என்று சொல்கிறார் சக்தி அதற்கு ஜனனி நல்லா ஐஸ் வைக்கிற என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். கொடைக்கானலுக்கு கூட்டிட்டு போயி இதைவிட எப்படி விதவிதமா கலர் கலரா ஐஸ் வைக்கிறேன் பார் என்று காமெடியாக பேசுகிறார் சக்தி. சரி உங்க அம்மா கிட்ட எல்லாம் சொல்லிட்டியா என்று என்னன்னு கேட்க நான் இப்பதான் உன் கிட்டயே நான் சொல்றேன் என்று சக்தி சொல்கிறார். இனிமேல் தான் அவங்க கிட்ட சொல்லணும் அவங்க ஓகே சொல்லுவாங்களா என்று ஜனனி கேட்க எப்படியாவது சம்மதம் வாங்கணும் என்று சக்தி சொல்கிறார்
66
கொடைக்கானலுக்கு செல்லஆசைப்படும் ஜனனி:
உனக்கு வர ஆசை இருக்க இல்லையா என்று சக்தி கேட்க இது என்ன கேள்வி என் புருஷன் உடைய என் புள்ளையோடையும் ஜாலியா ஊர் சுத்திட்டு வர்றது ஆசையா இருக்குது என்று தனது ஆசையை கணவன் சக்தியிடம் சொல்கிறார். அதற்கு சக்தி ஜனனி ஒரு குடும்ப பெண்ணாகவே மாறிட்டியே என்று கிண்டல் செய்கிறார். குழந்தையை பற்றி ஆசைப்படும் ஜனனி மற்றும் சக்தி: கலெக்டர் மதிவதனின் மகள் ஒரு ஓவியம் வரைந்து கொடுத்திருப்பார் ஒரு பெண் கருவியாக இருப்பது போல அதனை பார்த்து ரொம்ப சூப்பரா இருக்குல என்று சக்தி சொல்ல இதே மாதிரி நம்ம குழந்தையை ஒரு ஆர்டிஸ்டா மாத்திறனும் என்று ஜனனியிடம் சொல்கிறார் சக்தி. வாசி எல்லாம் தூக்கி அந்த குழந்தை மேல வச்சிறாத அவனுக்கு என்ன விருப்பமோ அதை படிச்சு வரட்டும் என்று ஜனனி சக்தியிடம் சொல்கிறார். அவனுக்கு என்ன புடிச்சிருக்கோ அதை செய்யட்டும் என்று சொல்ல எனது அவன எனக்கு பெண் குழந்தை தான் வேணும் என்று தனது விருப்பத்தை சொல்கிறார் சக்தி.