அய்யனார் துணை சீரியலில் நிலாவை சந்தேகப்படும் சோழன், அவர் ராகவ்வை காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை சீரியலில் நிலாவுக்காக ட்ரீட் கொடுத்த ராகவ், அவரை வீட்டுக்கு வழியனுப்ப வந்தபோது சோழனிடம் அவ என்னோட ஆளு என சொல்ல, அதைக்கேட்டு அப்செட் ஆன சோழன், காரில் வரும் போது நிலாவிடம் பேசாமல் கம்முனு வருகிறார். பின்னர் வீட்டுக்கு வந்ததும் அனைவரும் சேர்ந்து சோழன் சொன்ன பொய்யை சொல்லி கிண்டல் செய்ய, அதைக்கேட்டு கடுப்பான சோழன், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அப்போது அவரை சமாதானப்படுத்த பேச அழைக்கிறார் நிலா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
சோழனை சமாதானப்படுத்தும் நிலா
எப்பவுமே உங்க தம்பிங்க கிண்டல் பண்ணுனா நீங்க இப்படியெல்லாம் கோபப்படமாட்டீங்களே, இன்னைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க என நிலா கேட்கிறார். உடனே சோழன், நான் இதுக்கப்புறம் கோபப்படமாட்டேன் என சொல்கிறார். சரி, நீங்க எதுக்காக நான் உங்ககிட்ட புரபோஸ் பண்ணியதாக பொய் சொன்னீங்க என நிலா கேட்க, இனிமேல் சொல்ல மாட்டேங்க, இப்போ தான் எல்லா உண்மையும் தெரியுது, நான் இனிமேல் என்னைய திருத்திக் கொள்கிறேன் என சொல்கிறார். நிலாவும் ராகவ்வை விரும்புகிறார் போல என்கிற நினைப்பில் தான் சோழன் இப்படியெல்லாம் பேசி இருக்கிறார்.
34
பாண்டியன் வீட்டுக்கு விசிட் அடித்த வானதி
பின்னர் தனக்கு மதுரை வரை சவாரி இருப்பதாக கூறிவிட்டு இரவில் காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். மறுநாள் காலையில், நிலா, சேரன், பாண்டியன் ஆகியோர் சோழன் விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது வானதி ஒரு தூக்குச்சட்டியோடு வருகிறார். என்ன விஷயம் என பாண்டியன் கேட்க, தாங்கள் கோவிலில் பூஜை செய்ததாகவும் அதற்காக சாமிக்கு சர்க்கரை பொங்கல் படைச்சதாகவும், அதைக் கொடுக்க தான் இங்கு வந்ததாகவும் சொல்கிறார். வானதி கொண்டுவந்த பொங்கலை எல்லோரும் சாப்பிடுகிறார்கள். ஆனால் நிலா மட்டும் எனக்கு வேண்டாம் நான் அப்புறம் வந்து சாப்பிடுகிறேன் என சொல்லிவிட்டு ஆபிஸுக்கு கிளம்புகிறார்.
இதையடுத்து நிலா ஆபிஸுக்கு செல்கிறார். அங்கு தன்னுடைய தோழியோடு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கும்போது திடீரென எண்ட்ரி கொடுக்கும் ராகவ், என்ன ஆபிஸ் நேரத்துல சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க என சொல்லி நிலாவை திட்டிவிட்டு ஒரு கிஃப்டை கொடுக்கிறார். தான் பிராங்க் பண்ணுவதற்காக தான் திட்டினேன் என சொன்ன ராகவ்விடம் இந்த கிஃப்ட் வேண்டாம் என கூறுகிறார் நிலா. அதன்பின்னர் ராகவ் வற்புறுத்தியதால் அந்த கிஃப்டை நிலா வாங்கிக் கொள்கிறார். அதை ஒரு போட்டோ எடுத்து தன்னுடைய வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக போட்டுவிடுகிறார் ராகவ். இதை சோழன் பார்த்து டென்ஷன் ஆகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.