விவாகரத்து நோட்டீஸ் எதற்கு? சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு செக் வைக்கும் காதலன்

Published : Mar 19, 2026, 11:25 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஸ்வேதா, தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக ஆதி என்பவர் இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

PREV
14
Chinna Marumagal Serial Actress Swetha Divorce

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா, இவரின் காதலன் என கூறி ஆதி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து இருந்தார். ஆனால் அவருக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இன்ஸ்டாவில் பதிவிட்டு ஸ்வேதா பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், தற்போது ஆதி, நடிகை ஸ்வேதா தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், நான் யார் என்றே தெரியாது என சொன்னவர் தற்போது எதற்காக விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார் ஆதி.

24
ஸ்வேதா அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் பெயர் ஆதி, நடிகை ஸ்வேதாவின் கணவர், சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் நான் அளித்த பேட்டியில், நான் தான் அவர்களின் கணவர் என்பதையும் தெரிவித்திருந்தேன். அதற்கு பின்னர், ஸ்வேதா அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என்னை அவருக்கு தெரியாது; அவர் கூறுவது பொய்; என்று பல குற்றச்சாட்டுகளுடன் பதிவு வெளியிட்டிருந்தார்கள். ஒருவர் தெரியவில்லை என்றால், எப்படி விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடியும்? ஆனால் எனக்கு அவர்களிடமிருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த நோட்டீஸிலும் என்னைப் பற்றி பல குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

34
ஆதி வெளியிட்ட அறிக்கை

இத்தனை நாட்களாக நான் அமைதியாக இருந்தது - அவர்கள் என் மனைவி என்பதாலும், ஒரு பெண்ணை பொது இடத்தில் அவமதிக்கக் கூடாது என்ற மரியாதையாலும் தான். மேலும் ஒருநாள் அவர்கள் உண்மையை புரிந்து கொண்டு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடனும் காத்திருந்தேன். இதுவரை நடந்த பிரச்சனைகளில் தவறு என்னிடமே இருக்கலாம் என்று நினைத்து பல நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் சமீப காலத்தில் சில உண்மைகள் எனக்கு தெரிய வந்தது. அவர்களின் செயல்களால் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் வழங்கிய ஆதாரங்களை பார்த்தபோது எனக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டது.

44
சட்டப்படி எதிர்கொள்ள முடிவு

அவளை மதித்ததாலேயே என்னிடம் இருந்த சில முக்கிய ஆதாரங்களை வெளியிடாமல் வைத்திருந்தேன். அந்த விஷயங்களை இன்றும் முழுமையாக வெளியில் கூற விருப்பமில்லை. மேலும் என்னைப் பற்றிய தவறான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரவி வருகின்றன. இதனால் என் தொழிலும் தனிப்பட்ட ன் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதுடன், நான் கடுமையான மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளேன். இந்த அறிக்கையின் முக்கிய நோக்கம் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை தெளிவுபடுத்துவது தான்.

விவாகரத்து தொடர்பாக, நான் கொடுமை செய்தேன் என்று கூறி அளிக்கப்பட்ட புகார்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை விரைவில் சட்ட ரீதியாக நிரூபிப்பேன்” என கூறி உள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories