Chennai OMR Road Scene in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒவ்வொரு சீனுக்கும் இடையில் குன்றக்குடியில் நடக்கும் சம்பவத்திற்கு ஏன் சென்னையில் உள்ள ஓஎம்ஆர் இந்திரா நகர் ஸ்டேஷனை காட்டுறாங்க என்று ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2 சீரியலுக்கும் பெரியளவில் ஒன்றும் வித்தியாசம் இல்லை.
25
விஜய் டிவி சீரியல், சென்னை ஓஎம்ஆர்
ஏனென்றால் முதல் சீசனில் அண்ணன் தம்பிகள் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது அப்பா மகன்கள் உறவுகளுடனும் கடையுடனும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனில் மீனா அரசு வேலைக்கு செல்லவில்லை. மாறாக அவரது அப்பா பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் வைத்திருந்தார். அதனை செந்தில் கவனித்து வந்தார்.
35
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், விஜய் டிவி
ஆனால் இந்த சீரியலில் மீனா அரசு வேலைக்கு சென்ற நிலையில் செந்திலும் அரசு வேலைக்கு செல்கிறார். இந்த சீரியலில் புதிய வரவாக கோமதிக்கு தம்பி கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதோடு 2 மகள்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
45
பழனிவேல், காந்திமதி ஸ்டோர்ஸ்
இதில் கோமதியின் தம்பி ரோலில் பழனிவேல் நடித்து வருகிறார். சீரியல் ஆரம்பித்து இத்தனை நாட்களாக அக்கா மற்றும் மாமாவின் தயவிலிருந்த பழனிவேல் இப்போது அண்ணன்களின் உதவியால் புதிதாக காந்திமதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடை ஆரம்பித்துள்ளார். இத்தனை நாட்களாக பாண்டியன் மற்றும் சக்திவேல் என்று சண்டைக் காட்சிகளுடன் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இனி வரும் நாட்களில் பாண்டியன் மற்றும் பழனிவேல் என்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் காந்திமதி ஸ்டோர்ஸ் என்றே ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.
55
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல், குன்னக்குடி
இதில் இருவருக்கும் இடையில் நடக்கும் மோதலே அதிகளவில் இருக்கும் என்று தெரிகிறது. அதோடு, யாருடைய கடை புதிய உச்சம் தொடும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது குன்றக்குடியை சுற்றிலும் படமாக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஒவ்வொரு காட்சிகும் இடையில் ஏன் சென்னையில் உள்ள ஓஎம் ஆர் ரோட்டை காண்பிக்கிறார்கள் என்ற கேள்வியும் ஏமாற்றமும், வருத்தமும் இப்போது ரசிகர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்துள்ளது.