எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து அடுத்தடுத்து விலகிய 3 பிரபலங்கள்..? பின்னணி என்ன?

Published : Nov 21, 2025, 02:39 PM IST

சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் ஒன்று, இந்த சீரியலில் இருந்து அடுத்தடுத்து மூன்று பிரபலங்கள் விலகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

PREV
14
3 Actors Quit Ethirneechal Thodargiradhu Serial

சன் டிவியின் பிரைம் டைம் சீரியலாக திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் வேல ராமமூர்த்தி, பார்வதி, சபரி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, ஷெரின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் அதில் நடிக்கும் திறமை வாய்ந்த நடிகர்கள் தான். தற்போது வெற்றிநடைபோட்டு வரும் இந்த சீரியலில் இருந்து மூன்று முக்கிய நட்சத்திரங்கள் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

24
கனிகா விலகல்

அதில் ஒருவர் கனிகா. அவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆதி குணசேகரன் தாக்கியதில் கோமா ஸ்டேஜுக்கு சென்றதாக காட்டப்பட்ட ஈஸ்வரி, பேச்சு மூச்சின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதலில் காட்டப்பட்டது. கடைசியாக தர்ஷன் திருமணம் முடிந்த பின் அவர்கள் ஆஸ்பத்தியில் சென்று ஈஸ்வரியை பார்த்தது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த எபிசோடு முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதன்பின் ஈஸ்வரியை காட்டவில்லை. இதனால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சீரியல் குழுவினர் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

34
காணாமல் போன கரிகாலன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை கலகலப்பாக கொண்டு சென்றவர்களில் கரிகாலனும் ஒருவர். அவரின் டைமிங் காமெடிகள் ரசிக்கும்படி இருந்து வந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக கரிகாலனின் கேரக்டரையும் காணவில்லை. அவருக்கு பதில் முல்லையை காமெடியனாக வைத்து சீரியலை ஓட்டி வருகிறார்கள். கரிகாலன் என்ன ஆனார், எதனால் அவர் சீரியல் பக்கம் தலைகாட்டவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. அவர் கேரக்டர் பற்றிய அப்டேட் இல்லாததால், அவரும் இந்த சீரியலை விட்டு விலகி இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகின்றன.

44
மாயமான கதிர்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு அடுத்தபடியாக சிடுசிடுவென இருக்கும் கேரக்டர் என்றால் அது கதிர் தான். வெட்டி வீசிருவேன் என்று பெண்களிடம் சவுண்டு விடுவதற்காகவே கதிர் கேரக்டரை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவுக்கரசி ஜாமினில் வெளியே வந்தார், அவர் வந்ததில் இருந்து கதிர் மாயமாகிவிட்டார். அவரைப்பற்றிய அப்டேட்டும் இதுவரை சீரியல் குழு தரப்பில் வெளியிடவில்லை. இதனால் கதிர் கேரக்டரில் நடித்த விபு அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கக்கூடும் என பேச்சு அடிபடுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories