அண்ணா சீரியலில், இசக்கி கர்ப்பம் அடைந்ததால் ஒட்டுமொத்த குடும்பமே உற்சாகத்தில் உள்ள நிலையில், இன்று சௌந்தர பாண்டி கூறிய அதிர்ச்சிகரமான தகவல் பற்றி பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக இருக்கும் 'அண்ணா' சீரியலில், சண்முகத்தின் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தற்போது பரணி வீட்டுக்கு வந்தது மட்டும் இன்றி, இசக்கியும் கர்ப்பமான தகவலால் சண்முகத்தின் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.
26
முருகன் அருளால் வந்த நல்ல சேதி
சண்முகம், ரத்னா விஷயத்தில் தன்னை குற்றம்சாட்டியதால் இனி, வீட்டுக்கே வரமாட்டேன் என கூறி அப்பா வீட்டுக்கு பரணி சென்ற நிலையில், இசக்கி கர்ப்பம் ஆனதால் மீண்டும் வீட்டுக்கு வருகிறாள். பரணி வீட்டுக்கு வந்த தகவல் மற்றும், இசக்கி கர்ப்பம் பற்றி அறிந்து வீட்டுக்கு வரும் சண்முகம் மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் வடிக்கிறான்.
பிறகு பரணி ரூமுக்குள் இருக்க, சமூகம் மிகுந்த ஆனந்ததோடு உள்ளே வருகிறான். பரணியின் கோவம் மாறாததால், இங்க பாரு மத்தவங்க முன்னாடி தான் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி. ஆனால் இந்த ரூமுக்குள்ள நீ யாரோ நான் யாரோ என்று கண்டிஷன் போட்டு வாழ துவங்குவது மட்டும் இன்றி, இந்த கண்டீஷனை மீறினால், வீட்டை விட்டு வெளியே போக தயாராக இருப்பதாக கூறுகிறாள்
46
பரணி போட்ட நிபந்தனை
சண்முகமும் பரணி கோபத்தில் இருப்பதை புரிந்து கொண்டு அவளின் நிபந்தனைக்கு சம்மதம் சொல்கிறான். அதே நேரம், பரணி தன்னை விட்டு விட்டு அமெரிக்காவுக்கு செல்ல மாட்டாள் என்கிற நம்பிக்கையும் அவனுக்குள் உதிக்கிறது.
தன்னுடைய குடும்பத்துக்கு வாரிசு போறபோவதை அறிந்த சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டிற்கு வருகிறார். இசக்கி கர்ப்பமாக இருப்பது எனக்கும் ரொம்ப சந்தோசம் என கூறி கொண்டே ஒரு இடையை சண்முகம் தலையில் இறங்குகிறார். அதாவது, இந்த குடும்பத்தில் யாருக்குமே முதல் கரு தங்கியதில்லை என்று கூறுகிறான். சூடாமணி, பாக்கியம் என எல்லாருக்கும் முதல் கரு களைந்து விட்ட விஷயத்தை சொல்ல இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
66
கரு நிலைக்குமா? நிலைக்காதா?
இசக்கியும் இந்த கரு நிலைக்குமா? நிலைக்காதா? என பயபுட தொடங்குகிறாள். இசக்கியை பத்திரமாக பார்த்து கொள்ள சண்முகம் குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். இப்படியான நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.