பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அஞ்சலி, சரவணனுக்கு போன் போட்டு பேசி இருக்கிறார். இருவரும் நெருங்கி பழக ஆரம்பிப்பதால் விரைவில் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் - ராஜியும் ஜாலியாக சென்னையில் உலா வந்துகொண்டிருக்க, மறுபுறம் சரவணன் தன்னுடைய முன்னாள் காதலி அஞ்சலி உடன் மீண்டும் பேசத் தொடங்கி இருக்கிறார். இருவரும் கோவிலில் சந்தித்தபோதே நம்பர் பரிமாறிக்கொண்ட நிலையில் சரவணனுக்கு மெசேஜ் பண்ணி பேசத் தொடங்கி உள்ளார் அஞ்சலி. மறுபுறம் மனைவி மீதுள்ள கோபம் குறையாமல் அவரை வெறுத்து ஒதுக்கி வருகிறார் பாண்டியன். இவர்கள் மீண்டும் பேச வைக்க சரவணன், அரசி, பழனி ஆகியோர் படாத பாடு படுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ராஜிக்காக கதிர் பாடிய பாட்டு
ராஜியும் கதிரும் மறுபடியும் பீச்சுக்கு சென்று ஜாலியாக ரொமான்ஸ் பண்ணுகிறார்கள். அப்போது அங்கு ஆர்கெஸ்ட்ரா குரூப் பாட்டுப்பாடி டொனேஷன் வசூலிக்கிறார்கள். அந்தக் கச்சேரியை கதிர், ராஜி இருவரும் ரசித்துக் கேட்கிறார்கள். அப்போது மேடையில் ஏறும் கதிர், அந்த குழுவினரிடம் பேசி, தான் ஒரு பாடல் பாடிக்கொள்ள அனுமதி கேட்கிறார். அதற்கு அவர்களும் சம்மதிக்க, கதிர், ஒரு காதல் பாடலைப் பாடி ராஜியை இம்பிரஸ் செய்கிறார். கதிரின் இந்த எதிர்பாரா சர்ப்ரைஸால் ராஜி மிகுந்த சந்தோஷம் அடைகிறார். உனக்கு பாட்டெல்லாம் பாட வருமா என ராஜியே ஆச்சர்யத்துடன் கதிரிடம் கேட்கிறார். இதன்பின்னர் இருவரும் ரூமுக்கு சென்றுவிடுகிறார்கள்.
35
சரவணனுக்கு போன் போட்ட அஞ்சலி
சரவணனிடம் போன் நம்பர் வாங்கி இருக்கும் அஞ்சலி, நேற்று மெசேஜ் வாயிலாக பேசிய நிலையில், இன்று போன் பண்ணி பேசி இருக்கிறார். தேவையில்லாம போன் பண்ணி உங்க வேலையை கெடுக்குறேனாப்பா என அஞ்சலி கேட்க, அப்படியெல்லாம் இல்ல சொல்லு என கூறுகிறார் சரவணன். குன்னக்குடி வந்த பின்னர் பேசக்கூட ஆள் இல்லாம இருந்தேன்னு அஞ்சலி சொல்ல, உன்னோட பிரெண்ட்ஸ் பல்லவி, கல்பனா, சித்ராலாம் இருப்பாங்களே என சரவணன் கேட்டதும், ஓஹோ எல்லா பேரும் உனக்கு நியாபகம் இருக்கா என கிண்டலடிக்கிறார் அஞ்சலி.
சரி அவங்களிடம் நீ பேசுவதில்லையா என சரவணன் கேட்க, அதற்கு அவர், எல்லாரும் ஆளுக்கு ஒரு திசையில போயிட்டாங்க. எப்பயாச்சும் பொங்கல் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லிப்போம் அவ்வளவுதான். நீ எப்போ இருந்து உங்க அப்பா கடைக்கு வேலைக்கு போக ஆரம்பிச்ச என அஞ்சலி கேட்க, குமரேசன் தாத்தா வேலையவிட்டு நின்னுட்டாரு அதுக்கப்புறம் தான் நான் வேலைக்கு வர ஆரம்பிச்சுட்டேன் என கூறுகிறார் சரவணன். இப்படி இருவரும் மாறி மாறி கடலைபோட்டுக் கொண்டிருக்க, அப்போது பாண்டியன் கடைக்கு வருகிறார். உடனே போனை கட் பண்ணிவிடுகிறார் சரவணன்.
55
சரவணனுக்கு அட்வைஸ் பண்ணும் பாண்டியன்
அதன்பின்னர் சரவணனிடம், காலையில் கோவிலுக்கு எதுக்கு போன என விசாரிக்கிறார் பாண்டியன். ஒரு வேண்டுதலுக்காக சென்றேன். வேண்டுதல் எனக்கு இல்ல, அம்மாவுக்கு, உங்களோட கோபம் குறையணும்னு வேண்டிக்கிட்டேன் என சொல்லி, சரவணன் பாண்டியனுக்கு அட்வைஸ் பண்ணலாம்னு போக, இறுதியாக பாண்டியன், சரவணனுக்கு அட்வைஸ் பண்ணி அவர் சொல்ல வந்த விஷயத்தை அப்படியே ஆஃப் பண்ணிவிடுகிறார். கதிர் - ராஜியால் இங்கு பிரச்சனை சென்றுகொண்டிருக்க, அவர்களோ மெட்ராஸில் ஜாலியாக டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.