எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி வெற்றிகரமாக ஃபுட் டிரக் பிசினஸை தொடங்கி இருப்பதால், அவரை தீர்த்துக்கட்ட நேரடியாக களத்தில் குதித்துள்ளார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஜனனி, தமிழ் சோறு என்கிற ஃபுட் டிரக் பிசினஸை தொடங்கவிடாமல் இடத்துக்காரர் பிரச்சனை பண்ணிய நிலையில், டிஎஸ்பி வரை அவருக்கு இன்பிளூயன்ஸ் இருந்ததால், ஜனனியால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. இதையடுத்து கடவுள் போல் வந்த கலெக்டர் மதிவதினி, ஜனனி தரப்பில் நியாயம் இருப்பதை அறிந்து, இடத்துக்காரரிடம் ஏதாவது பிரச்சனை செய்தால், கம்பி எண்ண வேண்டியிருக்கும் என சொல்லி வார்னிங் கொடுத்து, அதன் பின்னர் ஜனனியின் கடை திறப்பு விழாவிலும் கலந்துகொண்டார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
பிசினஸ் தொடங்கிய ஜனனி
ஜனனி பிசினஸ் தொடங்கியது தெரிந்ததும், கதிர் ஏற்பாடு செய்த ஆள் ஒருவரை அங்கு சென்று பாம் போட்டு கடையை துவம்சம் செய்யுமாறு ஆதி குணசேகரன் சொல்ல, அந்த நபரும் ஜனனியின் ஃபுட் டிரக் அருகே சென்று பையில் இருந்த பாமை எடுத்து வீச முயலும் போது, ஜனனி பாசமாக தம்பி உனக்கு என்ன வேண்டும் என அவரை கவனிக்கிறார். காசு இல்லேனாலும் பரவாயில்ல சாப்பிடு என சாப்பாடு கொடுக்கிறார். இதனால் மனம் மாறிய அந்த ரெளடி, அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். பின்னர் கதிர், நம்முடைய பிளான் சொதப்பிவிட்டதாக ஆதி குணசேகரனிடம் சொல்ல, அவர் டென்ஷன் ஆகிறார்.
34
ஆதி குணசேகரனின் அடுத்த பிளான்
இதையடுத்து அவர் தன்னுடைய தம்பிகளான ஞானம் மற்றும் கதிரை திட்டுகிறார். உங்களையெல்லாம் நம்பி ஒரு வேளை கொடுத்தேன் பாரு என் தப்புடா. இனிமே நீங்க இதில் தலையிட வேண்டாம், நான் பாத்துக் கொள்கிறேன் என களத்தில் குதிக்கிறார். திரும்ப வீட்டுக்கு போகிறோமா என கரிகாலன் கேட்க, அவளுகளின் கதையை முடிக்கும் வரை வீட்டிற்குள் செல்ல மாட்டேன் என ஆதி குணசேகரன் சொல்கிறார். தற்போது தங்கி இருக்கும் சிறுமலை ஏரியாவில் இருந்து தனது தம்பிகளுடன் வேறு இடத்துக்கு மாற முடிவு செய்திருக்கிறார் குணசேகரன். அங்கிருந்து ஜனனியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்போகிறாராம். உன்னை நம்பிதான் வருகிறேன் என போனில் பேசியபடி செல்கிறார் குணசேகரன்.
மறுபுறம் வீட்டில் பிசினஸுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் நந்தினி, ரேணுகாவிடம் ஒரு தத்துவம் சொல்கிறார். முந்தைய நாள் நடந்ததை எல்லாம் மறந்துடனும், அடுத்த நாள் புதுசா ஆரம்பிக்கனும். இன்னைக்கு தான் நாம பொறந்திருக்கோம்னு நினைச்சு ஒவ்வொரு விஷயத்தையும் புதுசா செஞ்சோம்னா வெற்றி நிச்சயம் என சொல்ல, அய்யோ இவவேற கருத்து சொல்லி கழுத்தறுக்குறாளே என புலம்புகிறார் ரேணுகா. இதையடுத்து என்ன ஆனது? ஆதி குணசேகரனின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என்ன? அவர் யாரை சந்திக்க போகிறார்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.