கார்த்திகை தீபம் 2 சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் விஜய் பட நடிகை கௌசல்யா!

Published : Nov 23, 2025, 03:21 PM IST

Gowsalya Entry in Karthigai Deepam 2 Serial : கார்த்திகை தீபம் 2 சீரியலில் புதிய எண்ட்ரியாக விஜய் பட நடிகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

PREV
16
கார்த்திகை தீபம் 2 சிரீயல் கௌசல்யா

கார்த்திகை தீபம் 2 சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சென்னையில் பெரிய பணக்காரனாக இருக்கும் கார்த்திக் தனது தாத்தாவின் ஆசைப்படி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தவும், பிரிந்திருந்த அத்தை மற்றும் தாத்தாவின் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்கவும் அத்தையின் ஊருக்கு அதாவது கிராமத்திற்கு வருகிறார். தான் ராஜா சேதுபதியின் பேரன் என்று சொன்னால் அத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பதற்காக அத்தையின் வீட்டில் டிரைவராக வேலை பார்க்கிறார்.

26
கார்த்திகை தீபம் 2 சீரியல்

நாளடைவில் அத்தையின் நம்பிக்கையை பெற்று அவரது கட்டாயம் மற்றும் விருப்பத்தில் பேரில் அத்தையின் 2ஆவது மகளான ரேவதியை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு கார்த்திக்கைப் பற்றியும், அவரது நல்ல மனசு பற்றியும், அவர் யார் என்ற உண்மையையும் தெரிந்துக் கொண்டு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். பின்னர் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் காதலிக்கின்றனர்.

36
நடிகை கௌசல்யா

இந்த நிலையில் தான் ஏற்கனவே கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கார்த்திக்கின் அம்மா சாலை விபத்தில் உயிரிழக்கவே கும்பாபிஷேகம் நின்றது. இதைத் தொடர்ந்து தற்போது 2ஆவது முறையாக கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் தொடங்கியுள்ளது.

46
கார்த்திகை தீபம் 2 சீரியல்

முகூர்த்தக்கால் நடப்பட்டு சாமியாடி அருள் கேட்கப்பட்டது. ராஜராஜன் தான் சாமியாடி ஊரை வலம் வந்து விளக்கு ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கு சாமுண்டீஸ்வரி வரமாட்டேன் என்று கூறியிருந்த நிலையில் கார்த்திக் வந்தால் தான் ராஜா சேதுபதியின் பேரன் யார் என்ற உண்மை தெரிய வரும். மேலும், தனக்கு ராஜா சேதுபதியின் பேரன் யார் என்ற உண்மை தெரியும் என்றும் கும்பாபிஷேகம் நல்லபடியாக முடிந்தால் நானே உங்களிடம் சொல்கிறேன் என்றும் கார்த்திக் கூறினார்.

56
கும்பாபிஷேகம்

அதன் பிறகு அனைவரும் கோயிலுக்கு புறப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தான் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக கும்பாபிஷேக எபிசோடு இன்று மாலை 5 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது. இதில் கும்பாபிஷெகத்தை நிறுத்த சந்திரகலா, சிவனாண்டி மற்றும் காளியம்மாள் ஆகியோர் கோயிலில் வெடி குண்டு வைத்தனர். அதுமட்டுமின்றி ரேவதியை கடத்தி சென்றுவிடுகின்றனர். அப்போது தான் புதிய அறிமுகமாக பிரபல நடிகையான கௌசல்யா எண்ட்ரி கொடுக்கிறார்.

66
ஐபிஎஸ் அதிகாரியாக வரும் கௌசல்யா

ஐபிஎஸ் அதிகாரியாக வரும் கௌசல்யா ரேவதியை காப்பாற்றுகிறார். அதன் பின்னர், கும்பாபிஷேகம் நடக்கிறதா? இல்லையா என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியல். காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை கௌசல்யா அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கார்த்திகை தீபம் 2 சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories