Palanivel and Senthil Fight in Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வார கடைசியாக காந்திமதி ஸ்டோர்ஸ் திறப்பு விழாவின் போது பழனிவேல் மற்றும் செந்தில் இருவரும் சண்டையிட்டு அடித்துக் கொண்ட காட்சி இடம் பெற்றிருந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டினை பழி வாங்க என்ன வழி என்று சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் நீண்ட காலமாக காத்துக் கொண்டிருந்தனர். அதற்கு தம்பி பழனிவேலுவின் மூலமாக வழி பிறந்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட இருவரும் பழனிவேலுவிற்கு சரியான பாதையை காண்பித்தார்களா இல்லையா என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர்களது எண்ணம் நிறைவேறியதை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.
28
பழனிவேலுவை பாண்டியன் குடும்பத்திடமிருந்து பிரித்துவிட்டனர்
பாண்டியனிடமிருந்து பழனிவேலுவை பிரிக்க வேண்டும், பாண்டியனை நடுத்தெருவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டனர். அதில் முதல் படியாக பழனிவேலுவை பாண்டியன் குடும்பத்திடமிருந்து பிரித்துவிட்டனர். ஒரே தெருவில் பல மளிகைக் கடைகள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் எப்படி நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை விட பழனிவேல் திறந்துள்ள காந்திமதி ஸ்டோர்ஸ் கடை ரொம்பவே பெரியது.
38
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் அனைவரும் சிறிய கடையை விட பெரிய கடைக்கு தான் செல்வார்கள். அதுமட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தங்கமயில் மற்றும் மாணிக்கம் இருவரும் கடையை ஆட்டைய போட திட்டமிட்டு வருகின்றனர். அப்படியிருக்கும் போது பழனிவேல் திறந்துள்ள கடைக்கு தான் இப்போது வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
48
கடை திறந்த பழனிவேல்
கடை திறந்த பழனிவேல் தனது மச்சான் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு தான் பழனிவேலுவை துரோகி, அண்ணன்களோடு சேர்ந்து குடும்பத்திற்கு துரோகம் செய்துவிட்டான். பிள்ளை மாதிரி வளர்த்தோம், நெஞ்சில் கத்தியை இறக்கிவிட்டாய் என்று கூறி கோமதியும், பாண்டியனும் மாறி மாறி தங்களத் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதற்கு அப்புறமும் இந்த நன்றிகெட்டவன் ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்க கூடாது.
58
அக்காவும் இல்லை, மாமாவும் இல்லை
அக்காவும் இல்லை, மாமாவும் இல்லை. இந்த வீட்டிற்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ வீட்டை விட்டு வெளியில் போயிடு என்று கழுத்தை பிடித்து வெளியில் துரத்தாத குறையாக பழனிவேலுவை வீட்டைவிட்டு வெளியில் விரட்டினர். எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு நீ எப்படி கடையை நடத்து நான் பார்க்கிறேன். பாண்டியனை மட்டும் அழித்துவிடலாம் என்று கனவில் கூட நினைக்காத.
68
பழனிவேல் பக்கம் உள்ள நியாயத்தை கேட்கவே இல்லை
நீ மளிகைக் கடை வைத்தால் நான் என்ன தெருவுக்கு வந்துவிடுவேன் என்று நினைக்கிறாயா என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பாண்டியன் பேசி கடைசியில் சாபம் விட்டார். ஆனால், கடைசி வரை பழனிவேல் பக்கம் உள்ள நியாயத்தை கேட்கவே இல்லை.
78
அழுதுகொண்டே கடைக்கு வந்த பழனிவேல்
அழுதுகொண்டே கடைக்கு வந்த பழனிவேல் என்ன நடந்தது என்பது பற்றி தனது ஆத்தாவிடம் சொல்லி அழுதார். இதைத் தொடர்ந்து செந்தில் மற்றும் சரவணன் இருவரும் கடைக்கு வருகிறார்கள். அப்போது பழனிவேலுவின் சட்டையை பிடித்து செந்தில் சண்டை போட்டுள்ளார். பழனிவேலுவை மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். தனது தம்பியை அடிப்பதை பார்த்த சக்திவேல் செந்திலின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்துள்ளார்.
88
கோபத்தில் உச்சத்திற்கு சென்ற பழனிவேல்
ஒரு கட்டத்தில் கோபத்தில் உச்சத்திற்கு சென்ற பழனிவேல் என்னை தான் வீட்டை விட்டு துரத்தியாச்சுல. அப்புறம் எதுக்கு இங்க வந்து சண்டை போடுறீங்க. எப்போது நான் உங்களுக்கு தேவையில்லையோ இனிமேல் நீங்களும் எனக்கு வேண்டாம் என்று ஆவேசமாக பேசியுள்ளார். ஆனால், இதெல்லாம் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் நடந்த காட்சிகள் தான். அதனை கொஞ்சம் மாற்றி இயக்குநர் இந்த சீசனில் வைத்திருக்கிறார். முதல் சீசனில் மீனாவின் அப்பா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் வைத்திருந்தார். இப்போது பழனிவேல் கடை திறந்துள்ளார்.