சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் கல்யாணி என்கிற உண்மையை மீனா சொன்னதும் கடும் கோபமடையும் முத்து அவரை தள்ளி கொன்றுவிடுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தனக்கு ஏற்கனவே கல்யாணமாகி கணவர் இறந்துவிட்டதை மறைத்தது மட்டுமின்றி தான் கிரிஷுடைய அம்மா என்கிற உண்மையையும் மூடி மறைத்தது மீனாவுக்கு அண்மையில் தெரியவந்தது. இந்த உண்மையை குடும்பத்தாரிடம் சொன்னால் தானும், கிரிஷும் தற்கொலை செய்துகொள்வோம் என்று ரோகிணி பிளாக்மெயில் செய்ததால், அதை யாரிடமும் சொல்லாமல் மூடி மறைத்திருந்தார் மீனா. ஆனால் நேற்றைய எபிசோடில் மீனா, முத்துவிடம் ரோகிணி பற்றிய எல்லா உண்மைகளையும் போட்டுடைப்பது போல் காட்டப்பட்டது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
24
அண்ணாமலைக்கு நெஞ்சுவலி
ரோகிணியின் உண்மையான பெயர் கல்யாணி என்றும், அவர் நம் அனைவரையும் ஏமாற்றி மனோஜை இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து கொண்டதையும் கூறுகிறார். அதுமட்டுமின்றி கிரிஷ் தான் ரோகிணியின் மகன் என்கிற உண்மையையும் சொல்லிவிட, இதைக்கேட்டு டென்ஷன் ஆன முத்து கோபத்தில் கத்துகிறார். அப்போது அங்கு வரும் அண்ணாமலை என்னடா ஆச்சு என கேட்க, அவரிடம் ரோகிணியின் ஏமாற்று வேலைகளை போட்டுடைக்கிறார் முத்து. இதைக்கேட்டதும் அண்ணாமலைக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதனால் முத்து மற்றும் மீனா இருவரும் பதறிப்போகிறார்கள்.
34
ரோகிணியை கொன்றாரா முத்து?
அந்த நேரத்தில் ரூமில் இருந்து வெளியே வரும் ரோகிணியை பார்த்ததும் பளார் என அறைவிட்ட முத்து, அவரின் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து சென்று வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிடுகிறார். அப்போது படியில் உருண்டு சென்று விழும் ரோகிணி, மண்டையில் அடிபட்டு இறந்துவிட, உடனே போலீஸ் வந்து முத்துவை கைது செய்கிறது. பின்னர் தான் இது கனவு என தெரியவருகிறது. தான் உண்மையை சொன்னால் இதெல்லாம் நடக்கும் என மீனா யோசித்துப் பார்த்திருக்கிறார். அதைதான் இவ்வளவு பில்டப் உடன் கூறி இருக்கிறார்கள். இங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்த மீனா, தன்னுடைய அம்மா வீட்டுக்கு செல்ல திட்டமிடுகிறார்.
முத்துவிடம் ஏதாவது ஒரு காரணத்திற்காக சண்டைபோட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு செல்ல முடிவெடுக்கும் மீனா, அவர் லேசாக குடித்துவிட்டு வந்ததை அறிந்ததும், அவரை கண்ணாபின்னாவென திட்டுகிறார். இதனால் டென்ஷன் ஆன முத்து தான் முழுவதுமாக குடிக்க இருப்பதாக சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த சண்டையை காரணாமாக வைத்து பையை எடுத்துக் கொண்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு கிளம்பி செல்கிறார் மீனா. இதையடுத்து என்ன நடந்தது? மீனாவை முத்து சமாதானப்படுத்தினாரா? ரோகிணி பற்றிய உண்மையை மீனா சொன்னாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.