எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் முடிவெடுத்த நிலையில், அவர் எஸ்கேப் ஆகி இருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, சக்தியை மீட்ட கையோடு, ஆதி குணசேகரனுக்கு எதிராக அதிரடி ஆக்ஷனில் இறங்கி இருக்கிறார். ஜட்ஜ் ஒருவரை சந்தித்து ஆதி குணசேகரனைப் பற்றி புட்டு புட்டு வைத்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, அய்யாதுரை பாண்டியன் என்கிற போலீஸ் தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து களத்தில் இறங்கிய நேர்மையான போலீஸ் அதிகாரியான அய்யாதுரை, ஆதி குணசேகரனை குண்டாஸில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
தலைமறைவு ஆன ஆதி குணசேகரன்
போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்கிற பயத்தில் ஆதி குணசேகரனை வீட்டை விட்டு வெளியேறுமாறு ஞானம் கெஞ்சி கேட்க, அவரும் வேறுவழியின்றி வீட்டை விட்டு கிளம்புகிறார். அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தர்ஷினி, நந்தினி ஆகியோர் தடுக்க, அவர்களை அறிவுக்கரசி மடக்கிப் பிடித்து, ரூமுக்குள் அடைத்துவிடுகிறார். பின்னர் ஆதி குணசேகரனை காரில் அழைத்துக் கொண்டு கதிர், ஞானம், கரிகாலன் ஆகியோரும் சென்றுவிடுகிறார்கள். குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைதானால், ஒரு ஆண்டுக்கு ஜாமினில் வெளியே வர முடியாது என முல்லையும் அறிவும் பேசிக்கொள்கிறார்கள்.
34
மிரட்டும் அறிவுக்கரசி
காரில் செல்லும் போது, அந்த ஜனனி நம்மளை இப்படி ஓட விட்டுட்டாலே அண்ணே என புலம்பும் ஞானம், நிலைமை மட்டும் சரியாகட்டும், நானே அவளை வகுந்துவிடுகிறேன் என ஆத்திரத்தில் பேசுகிறார். மறுபுறம் வீட்டில் உள்ள பெண்களை மிரட்டியபடி பேசும் அறிவுக்கரசி, ஒரு கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன். இந்த நிமிஷம் முடிவு பண்ணேன்னு வை, ஐந்து பேரையும் போட்டுதள்ளிட்டு நான் பாட்டுக்கு ஜெயிலுக்கு போயி உக்காந்திருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் போது, கேட் திறக்கும் சத்தம் கேட்கிறது. அப்போது ஜனனி மாஸாக எண்ட்ரி கொடுக்கிறார்.
ஜனனியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே செல்லும் அறிவுக்கரசி, அரிவாளை எடுத்துக் கொண்டு அவரை வெட்ட தயாராகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஜனனியை அறிவுக்கரசி கொலை செய்தாரா? ஆதி குணசேகரன் போலீசிடம் சிக்கினாரா? அய்யாதுரை பாண்டியன் தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரனை ஸ்கெட்ச் போட்டு தூக்கினாரா? சக்தியின் உடல்நிலை என்ன ஆனது? ஜனனியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? ஆதி குணசேகரனை போல் அறிவுக்கரசியையும் ஓடவிடுவாரா ஜனனி? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.