₹700 கோடி பிரம்மாண்ட சிப் தயாரிப்பு திட்டத்தை நிறுத்திய Zoho! ஏன் தெரியுமா?

Published : May 03, 2025, 10:24 PM IST

தொழில்நுட்பத்தில் நம்பிக்கை இல்லாததால் ₹700 கோடி சிப் தயாரிப்பு திட்டத்தை Zoho நிறுத்தியது. முழு விவரங்கள் உள்ளே.  

PREV
16
₹700 கோடி பிரம்மாண்ட சிப் தயாரிப்பு திட்டத்தை நிறுத்திய Zoho! ஏன் தெரியுமா?

உலகளவில் மலிவு விலையில் வணிக மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் இந்தியாவைச் சேர்ந்த Zoho நிறுவனம், தனது  ₹700 கோடி சிப் தயாரிப்புத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வியாழக்கிழமை இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது, இந்நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல், குறைக்கடத்திகளில் உலகளாவிய மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்ற பெரிய கனவிற்கும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

26

Zoho நிறுவனம் கர்நாடகாவில் ₹400 கோடி மதிப்பிலான குறைக்கடத்தி ஆலையை நிறுவவும் திட்டமிட்டிருந்தது. ஆனால், சிப் உற்பத்தியின் சிக்கலான செயல்முறைக்கு வழிகாட்டக்கூடிய சரியான தொழில்நுட்ப கூட்டாளரை நிறுவனம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

36

இதற்கிடையில், ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, Zohoவின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் (X) பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "எங்கள் குறைக்கடத்தி உற்பத்தி ஆலை முதலீட்டுத் திட்டம் தொடர்பாக, இந்த வணிகம் அதிக முதலீடு தேவைப்படும் ஒன்று என்பதாலும், அரசு ஆதரவு அவசியம் என்பதாலும், வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவதற்கு முன்பு தொழில்நுட்பப் பாதையை முழுமையாக உறுதிப்படுத்த விரும்பினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

46

மேலும், "தொழில்நுட்பத்தில் எங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாததால், சிறந்த தொழில்நுட்ப அணுகுமுறையை நாங்கள் கண்டுபிடிக்கும் வரை இந்த யோசனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க எங்கள் குழு முடிவு செய்தது" என்றும் அவர் கூறியுள்ளார்.
சிப் தயாரிப்பு மிகவும் விலை உயர்ந்தது மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது என்பதால், குறிப்பாக வரி செலுத்துவோரின் பணம் சம்பந்தப்பட்டிருப்பதால், தொழில்நுட்பம் குறித்து உறுதியாக இருக்கும் வரை முன்னேற வேண்டாம் என்று வேம்பு தெரிவித்துள்ளார்.
 

56
zoho

Zoho ஏற்கனவே 'சைலெக்ட்ரிக் செமிகண்டக்டர் மேனுஃபேக்சரிங்' என்ற பெயரில் ஒரு குழுவை அமைத்து ஆட்சேர்ப்புகளைத் தொடங்கியிருந்தது. கர்நாடக அரசும் கடந்த டிசம்பரில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன், இது மைசூரு பகுதியில் 460 வேலைகளை உருவாக்கும் ஒரு மைல்கல் திட்டம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
 

66

இதனிடையே, அதானி குழுமமும் இஸ்ரேலின் டவர் செமிகண்டக்டருடன் இணைந்து மேற்கொள்ளவிருந்த தனது $10 பில்லியன் சிப் திட்டத்தை உள் மதிப்பாய்வுக்குப் பிறகு நிறுத்தி வைத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் புதன்கிழமை செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories