கையை அசைத்தாலே கதவு திறக்கும் சியோமி ஸ்மார்ட் லாக்: 3D முக அடையாளம், 2K கேமரா, 13 அன்லாக் வசதிகளுடன் அறிமுகம்!

Published : Nov 24, 2026, 03:41 PM IST

கையை அசைத்தாலே கதவு திறக்கும் சியோமி ஸ்மார்ட் லாக்! 3D முக அடையாளம், 2K கேமரா, 13 அன்லாக் வசதிகளுடன் வெளியான Xiaomi Smart Door Lock 5 விலை மற்றும் விவரம் இதோ!

PREV
15
கையை அசைத்தாலே கதவு திறக்கும் சியோமி ஸ்மார்ட் லாக்

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்களிலும் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வரும் சியோமி (Xiaomi) நிறுவனம், தற்போது வீட்டுப் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் புதிய Smart Door Lock 5 Face Recognition Edition சாதனத்தைச் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாவியோ அல்லது கைரேகையோ கூட இல்லாமல், வெறும் முகத்தைக் காட்டினாலோ அல்லது உள்ளங்கையைத் தூரத்திலிருந்து அசைத்தாலோ கதவைத் திறக்கும் நவீனத் தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த வரிசையில் வெளியான Smart Door Lock 5, 5C மாடல்களைத் தொடர்ந்து, 13 விதமான அன்லாக் வசதிகளுடன் இந்தப் புதிய மாடல் களமிறங்கியுள்ளது.

25
நொடியில் திறக்கும் 3D முக அடையாளம்!

இந்த ஸ்மார்ட் பூட்டில் மனிதக் கண்களைப் போலச் செயல்படும் இரட்டை லென்ஸ் (Dual-lens) கொண்ட 3D முக அடையாள அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. வாசலில் வந்து நின்ற ஒரு நொடியிலேயே உரிமையாளரின் முகத்தை இது துல்லியமாக அடையாளம் கண்டு கதவைத் திறந்துவிடும். 1.2 மீட்டர் உயரமுள்ள சிறுவர்கள் முதல் 2 மீட்டர் உயரமுள்ள பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் 0.4 முதல் 0.8 மீட்டர் தொலைவிலிருந்தே இது முகத்தை ஸ்கேன் செய்யும். புகைப்படம் அல்லது வீடியோவைக் காட்டி ஏமாற்ற நினைத்தால், இதில் உள்ள 3D Liveness Detection தொழில்நுட்பம் அதை உடனடியாகக் கண்டறிந்து தடுத்துவிடும். கும்மிருட்டிலும் கூட இது தடையின்றி வேலை செய்யும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

35
தொடாமலேயே திறக்கும் ஸ்கேனர்

கைரேகை தேய்ந்து போன முதியவர்கள், கைகளில் ஈரம் அல்லது அழுக்கு இருப்பவர்கள், உயரம் குறைந்த குழந்தைகளுக்காகவே இதில் Contactless Palm Vein வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சென்சாருக்கு 12 செ.மீ முதல் 20 செ.மீ தூரத்தில் உள்ளங்கையைக் காட்டினால் போதும், அகச்சிவப்பு கதிர்கள் (Near-infrared light) மூலம் தோலுக்கு அடியில் உள்ள ரத்த நாளங்களின் அமைப்பை ஸ்கேன் செய்து ஒரு நொடிக்குள் கதவைத் திறந்துவிடும்.

45
13 விதமான அன்லாக், 2K கேமரா, பாதுகாப்பு அம்சங்கள்

முக அடையாளம், உள்ளங்கை ஸ்கேனர் தவிர, வழக்கமான Fingerprint, நிரந்தர, தற்காலிக பாஸ்வேர்டுகள், புளூடூத், மொபைல் ஆப் மூலமாகத் தூரத்திலிருந்தே திறக்கும் வசதி, அவசரக் காலத்திற்கான சாதாரண சாவி எனப் பல வழிகள் இதில் உள்ளன. மேலும் சியோமி போன், ஸ்மார்ட் வாட்ச், பேண்ட், NFC கார்டு மூலமாகவும் கதவைத் திறக்க முடியும்.

கதவுக்கு வெளியே யார் நிற்கிறார்கள் என்பதை துல்லியமாகக் காட்ட 160 டிகிரி கோணத்தில் பார்க்கக்கூடிய 3MP 2K கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. வாசலில் யாராவது சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித் திரிந்தால், இதில் உள்ள ரேடார் சென்சார் தானாகவே வீடியோ பதிவு செய்து உரிமையாளரின் போனுக்கு அலர்ட் அனுப்பும். கதவின் உட்புறத்தில் 3.97 இன்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து யாராவது Doorbell அழுத்தினால், உள்ளே இருக்கும் திரையில் அவர்களின் முகம் தெரியும். வீட்டில் இல்லாத நேரங்களிலும் மொபைல் மூலமாகவே வீடியோ காலில் பேசிவிட்டுக் கதவைத் திறந்துவிடலாம். கதவு சரியாகப் பூட்டப்படாவிட்டாலோ அல்லது யாராவது பூட்டை உடைக்க முயற்சித்தாலோ உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்பும் பாதுகாப்பு அம்சங்களும் இதில் உண்டு.

55
பேட்டரி ஆயுள், விலை விவரம்!

இதில் உள்ள 5,000mAh லித்தியம் பேட்டரி சுமார் 4 மாதங்களுக்குத் தொடர்ந்து செயல்படும். அதன் சார்ஜ் தீர்ந்தவுடன், உள்ளே இருக்கும் 4 AA பேட்டரிகள் தானாகவே பொறுப்பேற்று மேலும் 6 மாதங்களுக்குப் பூட்டை இயக்க வைக்கும். ஒருவேளை பேட்டரி முழுமையாகத் தீர்ந்து விட்டால், வெளியில் உள்ள USB-C போர்ட் மூலம் பவர் பேங்க் இணைத்துக் கதவைத் திறந்துகொள்ளலாம்.

தற்போது சீனாவில் முன்பதிவுக்கு (Pre-sale) வந்துள்ள இந்த ஸ்மார்ட் டோர் லாக்கின் விலை 2,116 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மானியத்துடன் 1,799 யுவானுக்கு (சுமார் ரூ.21,500) இது கிடைக்கிறது. மற்ற நாடுகளில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories