Published : Oct 10, 2024, 12:27 PM ISTUpdated : Oct 10, 2024, 12:58 PM IST
Money Earning Walking Apps : நடைபயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்தையும், மனநலனையும் பராமரிக்க உதவுவதோடு உங்களுக்கு வருமானமும் ஈட்டி தரும். இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
நாம் நடப்பது என்பது நம்முடைய நலனுக்காக தான். அது முழுக்க முழுக்க நம்முடைய தனிப்பட்ட தேவைகள் சார்ந்தது. ஆனால் நடைபயிற்சிக்கு உண்மையான பரிசுகளை வழங்கும் சில செயலிகள் (apps) உள்ளன. நாம் நடப்பதற்கு ஏற்றார் போல அதிலிருந்து பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த பரிசுகளில் பணமும் அடங்கும். இந்தியாவில் நடப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
ஒருவர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது அவருடைய உடல் நலத்திலும், மனநலத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். சாதாரணமாக ஒரு நபர் தினமும் நடைபயிற்சி செய்பவராக இருந்தால் அவருடைய இதய ஆரோக்கியம் மேம்படும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். கால்கள் வலிமையாக மாறும், மன நலமும் மகிழ்ச்சியாக ஆகிவிடும்.
அதனால் தான் மருத்துவர்கள் எந்த நோயாக இருந்தாலும் அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபட சொல்லி வலியுறுத்துவார்கள். கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்கள் தினமும் நடந்தாலே போதுமானது. அப்படி இருக்கும்போது நடக்கும்போது சம்பாதிக்கவும் முடியும் என்பது நல்ல ஐடியா தானே.
25
Walking Apps To Earn Money In Tamil
இந்த செயலிகள் உங்களுடைய காலடிகளை (steps) கண்காணித்து, கிரிப்டோகரன்சி, மதிப்பீடு செய்யக் கூடிய சலுகைகள் (redeem) அல்லது தயாரிப்புகளை உங்களுக்கு வழங்கும். சில செயலிகள் உங்களுக்கு பணத்தை வழங்கும். நீங்கள் அன்றாடம் வேலைக்குச் செல்லும் வழியில் நடப்பதம் மூலமோ அல்லது பூங்காவில் மாலை வேளையில் நிதானமாக உலா வருவதன் மூலமோ கூடுதலாக பணம் ஈட்டுவதை நினைத்து பாருங்கள். கற்பனை செய்வதே நன்றாக உள்ளதல்லவா? இந்தப் பதிவில் இந்தாண்டில் நடைபயிற்சிக்கு பணம் தரும் சில செயலிகளை குறித்து காணலாம். இந்த செயலிகளில் நீங்கள் பணம் அல்லது பரிசுகளை பெற Paytm போன்ற பண பரிமாற்ற செயலிகளையும் பயன்படுத்துவது அவசியம்.
இந்தியாவில் பிரபலமாக உள்ள செயலிகளில் StepSetGo என்ற செயலி ஒன்றாகும். உங்களுடைய ஒவ்வொரு காலடிக்கும் நாணயங்களை வழங்கி ஊக்குவிக்கிறது. இந்த செயலியின், பார்ட்னர் பிராண்டுகள் வழங்கும் தயாரிப்புகள், சேவைகளுக்கு இந்த நாணயங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவையான பொருள்களை வாங்க முடியும். இந்த செயலி உங்களுக்கு சில சவால்களை வழங்கும். நீங்கள் அதனை நிறைவு செய்ய வேண்டும்.
Sweatcoin:
ஸ்வெட்காயின் என்பது Sweatcoins மூலம் உங்களுக்கு நடைபயிற்சி அல்லது ரன்னிங் மூலம் பணம் ஈட்டி தரும். இந்த செயலியில் பல்வேறு தயாரிப்புகள், சேவைகளை பெறலாம். இதில் ஸ்வெட்காயின்களைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம்.
Achievement:
இந்த செயலி உடல்நலம் பேண உதவும். இதில் நடைபயிற்சி மட்டுமின்றி உடற்பயிற்சி, தியானம் ஆகியவையும் உண்டு. இந்த செயலி PayPal அல்லது நேரடி வைப்பு மூலம் பணமாக மாற்றக்கூடிய புள்ளிகளை தரும். இதில் பணத்தை பெற அதிகமாக நடக்க வேண்டி வரலாம். ஏனென்றால் கூடுதல் புள்ளிகளுக்கு பொறுமை அவசியம்.
45
Walking Apps To Earn Money In Tamil
Runtopia:
நீங்கள் நடைபயிற்சி செய்வதன் மூலம் ரொக்கம், பரிசு அட்டைகள் உட்பட பல வெகுமதிகளைப் பெறலாம். இது நடப்பது மட்டுமின்றி ஓடுதல் சவால்களையும் வழங்கும். இந்த செயலியில் கிடைக்கும் புள்ளிகளை கொண்டு பல்வேறு தயாரிப்புகள், சேவைகளுக்கு சலுகைகளை பெறலாம். இது உங்களுடைய உடற்பயிற்சி நோக்கங்களை அடைய தனிப்பட்ட பயிற்சி திட்டங்களையும் வழங்கும். சில பிரீமியம் அம்சங்களை பயன்படுத்த சந்தா கட்ட வேண்டியிருக்கும்.
CashWalk:
உங்களுக்கு நடைபயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், கேம் விளையாடுதல் போன்றவற்றில் ஆர்வம் இருந்தால் இந்த செயலி ஏற்றது. இதன் மூலம் பணம் மற்றும் பரிசு அட்டைகள் போன்றவற்றை பெறலாம்.
Befitter:
நடைபயிற்சி, ஓட்டம் உள்ளிட்ட உடற்பயிற்சி தொடர்பான நடவடிக்கைகள் மூலம் இந்த செயலியில் பணம் ஈட்ட முடியும்.
Stepbet நடைபயிற்சிக்கு பண வெகுமதிகளை அள்ளி தரும் தனித்துவமான செயலி. இதில் உடற்தகுதி இலக்குகளை முடிக்க நீங்களே இலக்கை நிர்ணயித்து பந்தயம் கட்டி கொள்ளலாம். இந்த செயலி தனிநபருடைய முந்தைய செயல்பாட்டின் அடிப்படையில் சிறப்பான இலக்குகள், சவால்களை வடிவமைத்து தரும். ஒரு சின்ன குறை என்னவெனில் நீங்கள் முன்பணம் செலுத்தி இலக்குகளை அடைவதன் மூலம் கூடுதல் பணத்தை ஈட்டலாம். இது உங்களை இலக்குகளை அடைய கூட்டி செல்லும். பணம் கட்டுவது சிலருக்கு ஏற்றதாக இருக்காது.
Lifecoin;
இந்த செயலி உடற்பயிற்சி சவால்களை முடித்தவுடன் உங்களுக்கு Lifecoins வழங்கும். இதன் மூலம் நீங்கள் பல்வேறு தயாரிப்புகள், சேவைகளுக்காக சலுகைகளை பெற முடியும். பணம் என்பது நேரடியான பணமாக இல்லாம உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் சலுகைகளாக இருக்கும்.
Winwalk:
இந்த செயலி உங்களுடைய ஒவ்வொரி காலடிக்கும் நாணயங்களை வெகுமதியாக கொடுக்கிறது. இதன் மூலம் இந்த செயலியின் பார்ட்னர் பிராண்டுகளின் தயாரிப்புகளை வாங்கலாம்.
கரும்புத் தின்ன கூலியா? இன்னும் ஏன் தாமத்திக்குறீங்க.. உடனே போய் நடக்க ஆரம்பிங்க!! பணம் சம்பாதீங்க மக்களே!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.