பக்கா பேட்டரி... வேகமான சார்ஜிங்... ரூ.15,000 க்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!

First Published | Oct 9, 2024, 11:40 AM IST

ஒவ்வொரு நாளும் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் பற்றிய புதிய அப்டேட்ஸ் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப சரியான மொபைலைக் கண்டறிவது சிரமமாக இருக்கலாம். ஆனால் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வாங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சிறந்த சில போன்கள் இத்தொகுப்பில் பார்க்கலாம்.

CMF Phone 1 by Nothing

CMF ஃபோன் 1, MediaTek Dimensity 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Mali G615 MC2 GPU கிராபிக்ஸ் கொண்ட இது 8GB வரை LPDDR 4X ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜுடன் வருகிறது. மெமரி கார்டு மூலம் 2TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் 2.6 இல் இயங்குகிறது. 2 வருட OS அப்டேட் மற்றும் 3 வருட பாதுகாப்பு அப்டேட்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Infinix Note 40 Pro

இன்ஃபினிக்ஸ் நோட் 40 ப்ரோ 8GB ரேம்/256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.21,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் தற்போது ரூ.17,999 விலையில் உள்ளது. இதற்கு HDFC கார்டு மூலம் ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். அப்போது இதை ரூ.14,999 விலையில் வாங்கலாம்.

இன்ஃபினிக்ஸ் நோட் 40 ப்ரோ 6.78-இன்ச் FHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. MediaTek Dimensity 7020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) அம்சம் கொண்ட 108MP முதன்மை கேமரா உள்ளது. 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP டெப்த் கேமராவும் இருக்கும். செல்ஃபிக்களுக்கு, 32MP கேமரா உள்ளது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கிறது. இத்துடன் 20W வயர்லெஸ் MagCharge ஆப்ஷனும் உள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஜேபிஎல், ஐஆர் சென்சார் மற்றும் IP53 ரேட்டிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவை பிற முக்கிய அம்சங்கள்.

Tap to resize

Poco X6 Neo

Poco X6 Neo தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.12,999 விலையில் உள்ளது. HDFC வங்கி கிரெடிட் கார்டில் ரூ.750 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் ரூ.12,249 க்கு இந்த மொபைலை வாங்கிவிடலாம்.

போக்கோ எக்ஸ்6 நியோ 6.67-இன்ச் முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பும் உள்ளது. MediaTek Dimensity 6080 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. Mali G57 MC2 GPU கிராபிக்ஸ் கொண்ட இதில், 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.

108MP முதன்மை சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட இரட்டை கேமரா இருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16MP முன்பக்க கேமரா உள்ளது.

Realme Narzo 70 Turbo

ரியல் மீ நார்ஸோ 70 டர்போ அமேசானில் ரூ.16,998 விலையில் உள்ளது. இதற்கு ரூ.2,000 கூப்பன் மற்றும் Amazon pay ICICI வங்கி கார்டு மூலம் ரூ.750 கேஷ்பேக் பெறலாம். அப்படியானால், இதன் விலை ரூ.14,998 க்கு வந்துவிடும்.

6.67 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே, MediaTek Dimensity 7300 சிப்செட், Mali G615 MC2 GPU கிராபிக்ஸ், கொண்ட இந்த மொபைலில் 6GB LPDDR4X ரேம் மற்றும் 128 GB UFS 3.1 மெமரி உள்ளது.

50MP முதன்மை சென்சார் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் லென்ஸுடன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. 45W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி இருக்கிறது.

iQOO Z9

iQOO Z9 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. MediaTek Dimensity 7200 octa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது. பின்புற கேமரா அமைப்பில் 2MP இரண்டாம் நிலை சென்சாருடன் 50MP முதன்மை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிக்களுக்கான 16MP கேமரா உள்ளது.

8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த மொபைலில் 5000mAh பேட்டரி இருக்கிறது. 44W வேகமான சார்ஜிங் அம்சமும் உள்ளது. இரட்டை 5G சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். இதன் விலை தற்போது ரூ.18,499. ஸ்டேட் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.2,750 உடனடி தள்ளுபடியும் பெறலாம். அப்போது இந்த போனின் விலை ரூ.15,749 தான். இது ரூ.15,000 க்குக் குறைவாக இல்லை என்றாலும், இதுவும் ஒரு சூப்பரான டீல்தான்.

Latest Videos

click me!