apple diwali sale 2024
இந்தியாவில் ஆப்பிள் தீபாவளி விற்பனை தொடங்கியுள்ளது. இன்று முதல், பிரத்யேக தள்ளுபடிகள், வங்கி சலுகைகள் மூலம் சிறந்த ஆப்பிள் தயாரிப்புகளை குறைந்த விலையில் வாங்கலாம். ஐபோன் 15 ஐ வாங்கும்போது இலவச பீட்ஸ் சோலோ பட்ஸ் கிடைக்கும்.
ஐபோன்கள் மட்டுமின்றி, மேக்புக்ஸ், ஐபாட்கள், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆப்பிள் தயாரிப்புகளிலும் குறிப்பிடத்தக்க தள்ளுபடி கிடைக்கிறது.
ஆப்பிள் தனது தயாரிப்புகளுக்கு ரூ. 10,000 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த சலுகை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த அட்டைதாரர்கள் 12 மாதங்களுக்கு கட்டணமில்லா EMIஐயும் பெறலாம்.
கேஷ்பேக் டீல் எவ்வாறு கிடைக்கும் என்பதை ஆப்பிள் விளக்கியுள்ளது. ஐபோன் 16 தொடரில் ரூ. 5,000 தள்ளுபடியும், மேக்புக் ஏர் எம்3, மேக்புக் ப்ரோ ஆகியவற்றில் நேரடியாக ரூ. 10,000 சேமிப்பும், மேக்புக் ஏர் எம்2க்கு ரூ.8,000 கேஷ்பேக் கிடைக்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஆப்பிள் ஐபோன் 15 உடன் பீட்ஸ் சோலோ பட்ஸை இலவசமாக விற்பனை செய்கிறது. ஆனால் இந்த சலுகை அக்டோபர் 4 வரை ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
iPads மற்றும் Apple Watchக்கு, ஆர்வமுள்ள பயனர்கள் ரூ.6,000 வரை கேஷ்பேக் சலுகையைப் பெறலாம். இத்துடன் ஐபாட்களில் இலவசமாக என்கிரேவ் செய்து தருகிறது. ரூ.4,000 வரை உடனடி கேஷ்பேக் சலுகையுடன் ஏர்போட்களை ஆப்பிள் விற்பனை செய்கிறது. ஐபாட்களைப் போலவே, புதிதாக வாங்கிய ஏர்போட்களிலும் இலவசமாக என்கிரேவ் செய்துகொள்ள முடியும்.
சில ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கும்போது, 3 மாத ஆப்பிள் மியூசிக் சந்தாவையும் இலவசமாகப் பெறலாம்.
ஆப்பிள் எக்ஸ்சேஜ் சலுகைக்கு டிரேட்-இன் என்று பெயர் வைத்திருக்கிறது. தீபாவளி விற்பனையின் போது, இந்த ட்ரேட்-இன் மூலம் உங்களிடம் உள்ள ஐபோனைக் கொடுத்து புதிய ஐபோன் வாங்க உடனடி கிரெடிட்டைப் பெறலாம். இந்த வழியில் புதிய ஐபோன் வாங்க, ரூ.67,500 வரை கிரெடிட் கிடைக்கும்.
தீபாவளி சலுகை விற்பனையில் உங்கள் ஐபோனை டிரேட் இன் மூலம் ஐபோன் 16 க்கு அப்கிரேட் செய்துகொள்ளலாம். இதில் iPhone 15 Pro Max க்கு ரூ.67,500 கிரெடிட் கிடைக்கும். iPhone 15 Pro க்கு ரூ.61,500 கிரெடிட் வழங்கப்படும். அதாவது, ஐபோன் 15 ப்ரோவை ஐபோன் 16 ப்ரோவுக்கு மாற்றிக் கொண்டால், சுமார் ரூ.58,000 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் தொகை ஐபோன் 16 128 ஜிபி வேரியண்டின் விலையை விடக் குறைவு.
ஆப்பிள் டிரேட்-இன் மூலம் சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களையும் எக்ஸ்சேஜ் செய்து ஆப்பிள் மொபைல்களை வாங்கலாம். இதற்குத் தகுதியான பிராண்டுகள் மற்றும் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. Samsung, OnePlus, Google மற்றும் Redmi ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் உள்ளன. சுவாரஸ்யமான அம்சமாக Poco X3 மொபைலும் இந்தப் பட்டியலில் உள்ளது.