இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா நாளை (அக்டோபர் 4) Lava Agni 3 ஸ்மார்ட்போனை வெளியிடத் தயாராக உள்ளது. இந்த பட்ஜெட் மொபைல் ஃபோனில் 6.78-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே 120Hz வரை புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது MediaTek Dimensity 7300 சிப்செட் மூலம் இயங்கும். இது CMF ஃபோன் 1 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஆகியவற்றில் உள்ள அதே சிப்செட்தான். இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன் வரலாம். லாவா அக்னி 3, 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளிட்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். 66W வேகமான சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஃபினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் முதல் ஃபிளிப் போனான Infinix Zero Flip அக்டோபர் மாதம் இந்திய சந்தைக்குக் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் சில நாடுகளில் ஏற்கெனவே அறிமுகமாகியுள்ளது. 6.9-inch LTPO AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்ட இதில் 3.64-இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளேயும் உள்ளது. ஜீரோ ஃபிளிப் மீடியாடெக் டைமென்சிட்டி 8020 பிராசஸர் உள்ளது. இது மாலி G77 MC9 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், வழங்குகிறது. 50MP முதன்மை சென்சார் மற்றும் பின்புறத்தில் 50 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 32 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.