உலகின் முன்னணி மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் வசதிக்காகத் தொடர்ந்து புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக 'குரூப் மெம்பர் டேக்ஸ்' (Group Member Tags) என்ற புதிய அம்சத்தைச் சோதித்து வருகிறது. இது வாட்ஸ்அப் குரூப் பயன்பாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
25
அது என்ன 'குரூப் மெம்பர் டேக்'?
வாட்ஸ்அப் பீட்டா தகவல்களின்படி (Android 2.25.17.42), இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் தங்களை யார் என்று அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, உங்கள் பெயருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய குறிப்பை (Tag) நீங்களே எழுதிக்கொள்ளலாம். உதாரணமாக, அலுவலக குரூப்பில் 'மேனேஜர்', 'டிசைனர்' என்றோ அல்லது விளையாட்டு குரூப்பில் 'கோச்', 'கேப்டன்' என்றோ 30 எழுத்துக்களுக்கு மிகாமல் டேக் செய்து கொள்ளலாம். இது புதிய மற்றும் பழைய குரூப்கள் என இரண்டிலும் செயல்படும்.
35
அட்மின் அனுமதி தேவையில்லை
பொதுவாக வாட்ஸ்அப் குரூப்பில் மாற்றங்கள் செய்ய அட்மின் அனுமதி தேவைப்படும். ஆனால், இந்த டேக் வசதியில் ஒரு சிறப்பு என்னவென்றால், இதற்கு அட்மின் கட்டுப்பாடு கிடையாது. ஒவ்வொரு பயனரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, அந்த குழுவில் தங்களின் பங்களிப்பைப் பொறுத்து, தங்களின் டேக்குகளை உருவாக்கவோ, மாற்றவோ அல்லது நீக்கவோ முடியும். இது குழுவில் உள்ள மற்றவர்களுக்கு உங்கள் பங்கைத் தெளிவாக உணர்த்த உதவும்.
பாதுகாப்பு மற்றும் தெளிவான உரையாடலை உறுதி செய்ய வாட்ஸ்அப் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இந்த டேக்குகளில் சிறப்பு எழுத்துக்கள் (Special Characters), இணையதள இணைப்புகள் (Links) அல்லது போலியான டிக் மார்க்குகளைப் பயன்படுத்த முடியாது. வெறும் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.
55
இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது?
தற்போது இந்த வசதி பீட்டா சோதனையாளர்களிடம் மட்டுமே உள்ளது. விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
1. வாட்ஸ்அப் குரூப்பிற்குள் சென்று 'Group Info' பக்கத்தைத் திறக்க வேண்டும்.
2. அங்கு உங்கள் பெயரை கிளிக் செய்ய வேண்டும்.
3. தோன்றும் புதிய கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான 'டேக்'கை டைப் செய்து சேமிக்கலாம் (Save).
உடனடியாக அந்த டேக் குரூப்பில் உள்ள அனைவருக்கும் தெரியும். நீங்கள் போனை மாற்றினாலும் அல்லது செயலியை மீண்டும் இன்ஸ்டால் செய்தாலும் இந்த டேக் மறையாது.