WhatsApp Status Features: உங்களுக்காக வந்த வேற லெவல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் – ட்ரை பண்ணி பாருங்க!

First Published | Oct 8, 2024, 4:57 PM IST

WhatsApp Introduce Tag and Status Reshare Features: வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக இரண்டு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த அம்சங்கள் தனியுரிமை மென்ஷன் மற்றும் ஸ்டேட்டஸ் ரீஷேர் ஆகியவை அடங்கும். இந்த புதிய அம்சங்கள் விரைவில் அனைவருக்கும் பயன்படுத்த கிடைக்கும்.

WhatsApp Status New Features

WhatsApp Introduce Tag and Status Reshare Features: நாகரீகம் வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய காலகட்டத்தில் நாள்தோறும் டெக்னாலஜி மூலமாக ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. காலை முதல் இரவு வரையில் நமது அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் பல விதமான டெக்னாலஜி கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் நாம் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் என்று இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொருவரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. இதில் நாம் அதிகளவில் பயன்படுத்துவது ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், லிங்க்டு இன், கூகுள் பே, போன் பே இதுவாகத் தான் இருக்கும். இது தவிர ஹாட் ஸ்டார், ஜியோவில் படம், கிரிக்கெட் பார்க்க பயன்படுத்துவோம்.

WhatsApp Private Mention, WhatsApp Status Reshare

அப்படி நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு நாளும் புதுவிதமான அம்சங்கள் வந்து கொண்டே இருக்கிறது. வாட்ஸ் அப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்யலாம், வீடியோ காலில் பேசலாம், வாய்ஸ் நோட் அனுப்பலாம், போட்டோ, வீடியோக்கள் அனுப்பலாம். இதையும் தாண்டி ஏஐ டெக்னாலஜி நாம் தெரிந்து கொள்ள விஷயத்தை கூட எளிதாக தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பிட்னஸ் என்று மெட்டா ஏஐயில் டைப் செய்தால், அதைப் பற்றிய விவரங்களை உங்களுக்கு தெளிவாக கொடுக்கும்.

இப்படி புதுவிதான அம்சங்களை ஏற்கனவே வாட்ஸ்அப் கொண்டு வந்த நிலையில் தற்போதும் வாட்ஸ்அப் இரண்டு புதிய அம்சங்களைக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த அம்சங்கள் என்ன? அவற்றின் பயன் என்ன என்பதை இப்போது பார்ப்போம்….

Latest Videos


WhatsApp Introduce Tag and Status Reshare Features

நாள்தோறும் சாப்பிடுகிறோமோ இல்லையோ மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி பார்க்காம இருக்கமாட்டோம். அதனுடைய மோகம் நம்மை தொற்றிக் கொண்டு விட்டது. அப்படிப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தான் 2 புதிய அப்டேட்டுகளை கொண்டு வர வாட்ஸ்அப் தயாராகி வருகிறது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த வசதி கூடிய விரைவில் வாட்ஸ்அப்பிலும் கொண்டு வரப்பட உள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புதிய அப்டேட்களில் பிரைவேட் மென்ஷன் அம்சமும் ஒன்று. இந்த அம்சத்தின் உதவியுடன் நீங்கள் எந்த ஸ்டேட்டஸை பதிவிடும் போதும் மற்றொரு பயனரையும் உங்களால் குறிக்க முடியும். அதாவது, நீங்கள் யாருக்காக ஸ்டேட்டஸ் வைக்கிறீங்களோ அவர்களை இந்த புதிய அம்சத்தின் மூலமாக டேக் செய்யலாம். இது நீங்கள் என்ன குறியிட்டீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும். இது எல்லோருக்கும் தெரியாது. டேக் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும்.

WhatsApp Status

வாட்ஸ்அப் 2ஆவது புதிய அம்சம்:

இந்த 2ஆவது புதிய அம்சம் என்னவென்றால் ரீஷேர். அதாவது மறுபடியும் அனுப்பவது. எல்லோருமே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்போம். அப்படி வைக்கப்படும் ஸ்டேட்டஸ் உங்களுக்கு பிடித்திருந்தால், அந்த ஸ்டேட்டஸை உங்களுக்கு அனுப்ப சொல்லலாம். அந்த ஸ்டேட்டஸ் உங்களது போனிலும் ஸ்டேட்டஸாக போடப்படும்.

மற்றவர்கள் போட்ட ஸ்டேட்டஸை மீண்டும் ஷேர் செய்து, உங்களது போனிலும் ஸ்டேட்டஸாக கூட நீங்கள் வைக்கலாம். இந்த 2 புதிய அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் தங்களது அதிகாரப்பூர்வ் பக்கத்தில் அறிவித்துள்ளது. விரைவில் இந்த புதிய அம்சங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

How to Tag Someone for WhatsApp Status

எப்படி ஒருவரை டேக் செய்து கொள்ளலாம்:

முதலில் உங்களது போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

வாட்ஸ்அப் சென்று ஸ்டேட்டஸ் உருவாக்கி கொள்ள வேண்டும்.

டெக்ஸ்ட் பீல்டில் @ டைப் செய்து யாரை டேக் செய்து கொள்ள விரும்புகிறீர்களோ அவர்களது பெயரை டேக் செய்ய வேண்டும். இது நீங்கள் யாரை டெக் செய்தீர்களோ அவர்களால் மட்டுமே பார்க்க முடியும். எல்லோராலும் பார்க்க முடியாது. யாருடைய பெயரை குறிப்பிட்டீர்களோ அவர்களால் மட்டுமே பார்க்க முடியும்.

இதையும் படியுங்கள்….அமிதாப் பச்சன் ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ரஜினிகாந்த் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் – சீக்ரெட்டை உடைத்த இயக்குநர்!

click me!