பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு அகற்றவும்
செல்போன் தண்ணீரில் விழுந்தவுடன் வெளியே எடுத்தால் சில பாகங்களையாவது பாதுகாக்கலாம். செல்போனை வெளியே எடுத்து உடனடியாக பேட்டரி, சிம், மெமரி கார்டு ஆகியவற்றை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்த பாகங்களில் தண்ணீரில் விழுந்தால் துருப்பிடித்து சேதாரமாகும் வாய்ப்பு உள்ளது.
துணியால் துடைக்கவும்
தண்ணீரில் விழுந்த செல்போனை வெளியே எடுத்து முதலில் அதன் பாகங்களை பிரிக்க வேண்டும். பின்னர் ஒரு சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். குறிப்பாக காட்டன் துணி என்றால் நல்லது. இது தண்ணீரை நன்றாக உறிஞ்சும். ஹெட்ஃபோன் ஜாக், சார்ஜிங் போர்ட் போன்ற இடங்களில் கடினமாக அழுத்தித் துடைக்க வேண்டாம். இதனால் அந்த இடங்களில் உள்ள தண்ணீர் மேலும் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.