நாம் ஒரு அனிமேஷன் (animation) படம் பார்க்கும் போது, அது நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் அழைத்துச் செல்லும். ஆனால் சில படங்கள், அந்த உலகத்தை நம் மனதிலேயே வாழ வைத்துவிடும்! அப்படிப்பட்ட மகத்தான அனுபவத்தை கொடுக்கும் அனிமேஷன் ஸ்டைல் தான் Ghibli-Style கலை.
Studio Ghibli என்ற புகழ்பெற்ற ஜப்பானிய அனிமேஷன் ஸ்டூடியோ இதை உருவாக்கியது. Hayao Miyazaki மற்றும் Isao Takahata ஆகியோர் இதை வளர்த்தனர். My Neighbor Totoro, Spirited Away, Howl’s Moving Castle போன்ற திரைப்படங்கள் இந்த கலைபாணியை உலகளவில் பிரபலமாக்கின.
இப்போ, இந்த Ghibli-Style-ல என்ன தனித்துவம் இருக்கிறது என்று பார்க்கலாம்!
38
Ghibli-Style
1. கையால் வரையப்பட்ட பின்னணிகள் – கண்களுக்கு விருந்து!
Ghibli படங்களை பார்ப்பதற்கே ஒரு அலாதி அழகு இருக்கும். இதற்குக் காரணம், அத்தனை நுணுக்கமாக, கையால் வரையப்பட்ட பின்னணிகள்!
பசுமை நிறைந்த நிலப்பரப்பு
பழங்காலக் கிராமங்கள்
அற்புதமான சூரிய உதயம்
ஒவ்வொரு சின்ன விபரமும் கவனமாக வரையப்படும். ஒரு சாதாரண மரத்திலும் கூட அழகு இருக்கும்! இதனால் Ghibli படங்கள் ஒரு கண்காட்சியைப் போல தோன்றும்.
48
Ghibli-Style
2. வண்ணச் சேர்க்கையின் அழகு
Ghibli-Style-ல் வண்ணங்கள் முக்கியமான இடத்தை பெறும்.
பசுமையான இயற்கைக்காட்சிகளுக்கு அமைதியான வண்ணங்கள்
மாய உலகத்துக்கு பிரகாசமான நிறங்கள்
இருண்ட விஷயங்களுக்கு மங்கலான நிறங்கள்
ஒரு கதையின் உணர்வை வண்ணங்கள் மட்டுமாகவே வெளிக்கொணரலாம் – அதுதான் Ghibli-யின் மாயம்!
Ghibli-Style ஓவியங்கள் மற்றும் அனிமேஷன் இன்று பல தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.
Ni no Kuni, Eastward – Ghibli-Style வீடியோ கேம்கள்
டிஜிட்டல் ஓவியங்கள் – கலைஞர்கள் இதை மும்முரமாக உருவாக்குகிறார்கள்
புதிய அனிமேஷன் படங்கள் – இன்னும் பலர் இந்த ஸ்டைலைப் பின்பற்றுகிறார்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.