DSLR-க்கு சவால் விடும் புதிய கேமரா.. சாம்சங், ஆப்பிள் கதி அவ்ளோதான்.. Vivo X300 மிரட்டுது

Published : Sep 24, 2025, 12:07 PM IST

Vivo தனது புதிய X300 மற்றும் X300 Pro ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 13 அன்று அறிமுகப்படுத்துகிறது. Zeiss teleconverter, 200MP டெலிபோட்டோ லென்ஸுடன் வரும் இந்த போன்கள், DSLR போன்ற புகைப்பட அனுபவத்தை வழங்குகிறது.

PREV
14
Vivo X300 ஸ்மார்ட்போன்

சாம்சங், ஆப்பிளுக்கு சவால் ஸ்மார்ட்போன் சந்தையில் கேமரா தரத்தை மையமாகக் கொண்டு போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், Vivo தனது புதிய X300 மற்றும் X300 Pro ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 13 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

24
Vivo X300 Pro கேமரா

இதில் Zeiss 2.35x teleconverter அம்சம் வழங்கப்படுகிறது. இது DSLR போன்று புகைப்பட அனுபவத்தை தரும் என நிறுவனம் கூறியுள்ளது. Vivo X300 Series-இல் 200MP டெலிபோட்டோ லென்ஸ் Zeiss teleconverter உடன் வருகிறது. இதன் மூலம் 200mm, 400mm, 800mm நீளத்தில் புகைப்படம் எடுக்க முடியும்.

34
200MP டெலிபோட்டோ லென்ஸ்

நிறுவனம் வெளியிட்ட மாதிரிப் படங்கள் மிகத் தெளிவாகவும் விவரங்களுடன் இருப்பதாக தெரிவிக்கின்றன. நீண்ட தூர புகைப்படங்களில் ஸ்டெபிலைசேஷன் முக்கிய சவாலாகும். இதற்காக X300 Pro மாடலுக்கு 5.5 CIPA மதிப்பும், X300 மாடலுக்கு 4.5 CIPA மதிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கையால் எடுத்தாலும் படம் தெளிவாக இருக்கும்.

44
Portrait mode Vivo X300

இந்த teleconverter Pro மாடலுக்கே மட்டும் கிடைக்காது. X300 மற்றும் X300 Pro இரண்டிலும் இருக்கும். இரண்டு வண்ணங்களில் வரும் இந்த மாடல்கள் Snapshot மற்றும் Portrait mode போன்ற கூடுதல் அம்சங்களுடன் வெளியாகும். விலை விவரம் அக்டோபர் 13 அன்று அறிவிக்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories