குறைந்த விலையில் iPhone 17 கிடைக்கும் நாடுகள் என்னென்ன தெரியுமா?

Published : Sep 24, 2025, 09:42 AM IST

ஆப்பிளின் புதிய ஐபோன் 17 இந்தியாவில் ரூ.82,900 முதல் அதிக விலையில் அறிமுகமாகியுள்ளது.ஐபோன் விலை வித்தியாசத்தால், பலர் வெளிநாடுகளில் இருந்து ஐபோன் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

PREV
14
குறைந்த விலையில் ஐபோன் கிடைக்கும் நாடுகள்

ஆப்பிள் தனது புதிய ஐபோன் 17 (iPhone 17) மாடலை அறிமுகப்படுத்திய நிலையில், இந்தியாவில் அதன் விலை அதிகமாக இருப்பதைக் குறித்து பலர் பேசுகின்றனர். இந்தியாவில் ஐபோன் 17 தொடக்க விலை ரூ.82,900. ஐபோன் 17 Pro ரூ.1,34,900, Pro Max ரூ.1,69,900 மற்றும் Air ரூ.1,19,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24
ஐபோன் 17 சீரிஸ் விலை

ஆனால், அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், வியட்நாம் போன்ற நாடுகளில் இதே மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அமெரிக்காவில் ஐபோன் 17 வெறும் $799 (ரூ.70,468) முதல் கிடைக்கிறது. ப்ரோ மாடல் $1,099 (ரூ.96,927), ப்ரோ மேக்ஸ் $1,199 (ரூ.1,05,747), ஏர் $999 (ரூ.88,107). கனடாவில் ஐபோன் 17 விலை ரூ.72,128. Pro Max ரூ.1,11,737 வரை உள்ளது.

34
துபாயில் ஐபோன் 17 விலை

இதுவும் இந்தியாவைவிட குறைவு ஆகும். இங்கிலாந்தில் ஐபோன் 17 விலை ரூ.95,234. சிங்கப்பூரில் ரூ.89,380, Pro Max ரூ.1,30,665. வியட்நாமில் ரூ.83,571 மட்டுமே. துபாயில் AED 3,399 (ரூ.81,746) என குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதனால் இந்தியர்கள் துபாயில் இருந்து iPhone வாங்க அதிகம் விரும்புகின்றனர்.

44
சீனாவில் ஐபோன் 17 விலை

சீனாவில் ஐபோன் 17 விலை 5,999 யுவான் (ரூ.74,482). ப்ரோ மேக்ஸ் 9,999 யுவான் (ரூ.1,24,144). இந்தியாவுடன் ஒப்பிடும் போது, ​​இந்த 7 நாடுகளில் iPhone விலை குறைவாக இருப்பதால், பலர் அங்கிருந்து வாங்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இந்தியாவில் புதிய ஐபோன் 17 மாடலை வாங்க முடியாது என்பவர்கள் மேற்கண்ட நாடுகளில் குறைந்த விலையில் வாங்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories