Published : Feb 02, 2025, 05:14 PM ISTUpdated : Feb 02, 2025, 05:15 PM IST
விவோ நிறுவனம் விவோ V50 மாடல் ஸ்மார்ட்போனை பிப்ரவரி மாத இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த போனின் விலை, சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
Vivo V50: பட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ ஸ்மார்ட்போன்; என்னென்ன சிறப்பம்சங்கள்?
விவோ நிறுவனம் இந்தியாவில் Vivo V50 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. விவோ நிறுவனம் இன்னும் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், விவோ V50 மாடல் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விவோ V50 ஸ்மார்ட்போனின் விலை, அதன் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பாக்கலாம்.
24
விவோ V50 ஸ்மார்ட்போன்
விவோ V50 மாடல் போனின் விலை இந்தியாவில் ரூ.37,999 ஆக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ரூ.40,000 க்கும் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை விவோ V40 மாடலை விட சற்று அதிகரித்து இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் விவோ V40 ரூ.34,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் விவோ V50 முந்தைய மாடலை விட ரூ.3,000 விலை உயர்வைக் காணலாம்.
விவோ V50 மாடலின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை வலுவான செயல்திறனை வழங்கும் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட்டால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அன்றாட பயன்பாடு மற்றும் கேமிங்கிற்கு ஏற்றதாக அமைகிறது.
கேமராக்கள்: இரட்டை பின்புற கேமரா அமைப்பில் இரண்டு 50 மெகாபிக்சல் சென்சார்கள் இடம்பெறும். இது உயர்தர புகைப்படத்தை எடுக்க உதவுகிறது. முன்பக்கத்தில் விவோ V40 மாடலில் இருக்கும் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இதிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி: Vivo V50, V40 மாடலில் 5,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் விவோ V50 மாடல் இதை விட பெரிய பேட்டரியாக 6,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
44
விவோ V50 போனின் விலை
சார்ஜிங் வேகம்: 90W பாஸ்ட் சார்ஜிங் உள்ளதால் பயனர்கள் பயனடைவார்கள். இது விவோ V40 மாடலின் 80W சார்ஜிங் வேகத்தை விட அதிகமாகும். இதனால் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியும்.
நீர் மற்றும் தூசி எதிர்ப்பு: IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளுடன் விவோ V50 மாடல் வரலாம். இது நீர் மற்றும் தூசிக்கு மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கும். இது பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் பொதுவாகக் காணப்படும் அம்சமாகும்.
வடிவமைப்பு: விவோ V50 மாடல் ஸ்மார்ட்போன் V40 மாடலின் வடிவமைப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நீடித்து உழைக்கும் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும். இந்த போனின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.