இந்தியாவில் 5G ஸ்மார்ட்போன்களுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில், பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தனது புதிய Vivo T4 5G மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. முந்தைய Vivo T3 5G மாடலை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய போன் களமிறங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக, சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியுடன் Vivo T4 5G வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய கசிவுகளின்படி, இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, சிப்செட், பேட்டரி, சார்ஜிங் மற்றும் கேமரா போன்ற முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதுமட்டுமின்றி, போனின் வண்ண விருப்பங்கள் மற்றும் வடிவமைப்பு பற்றியும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெளியான தகவல்களில் Vivo T4 5G-ன் விலை, ரேம் மற்றும் சேமிப்பக விருப்பங்கள் பற்றியும் சில குறிப்புகள் கிடைத்துள்ளன.