பிஎஸ்என்எல் நோக்கி ஓடி வரும் வாடிக்கையாளர்கள்! 7 மாதங்களில் இத்தனை லட்சம் பேர் சேர்ப்பா?
கடந்த 7 மாதங்களில் பிஎஸ்என்எல் பக்கம் வாய்ந்த வாடிக்கையாளர்கள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
கடந்த 7 மாதங்களில் பிஎஸ்என்எல் பக்கம் வாய்ந்த வாடிக்கையாளர்கள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
BSNL adds 55 lakh new customers: பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த ஏழு மாதங்களில் 55 லட்சம் வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளதாகவும், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 9.1 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்கள்
கடந்த ஜூன் 2024 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளர்கள் 8.55 கோடியிலிருந்து 9.1 கோடி வாடிக்கையாளர்களாக உயர்ந்துள்ளதாக தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார். நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பொதுத்துறை நிறுவனம் மீண்டும் லாபத்தில் மீண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
Jio உடன் கைகோர்த்த BSNL! மத்திய அரசுக்கு ரூ.1757 கோடி காலி - CAG வெளியிட்ட அதிர்ச்சி ரிபோர்ட்
பிஎஸ்என்எல் 4ஜி
நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 4ஜி மொபைல் சேவைகளை நிறைவு செய்வதற்கான முக்கியமான திட்டத்தை பிஎஸ்என்எல் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு மத்திய அமைச்சரவை ரூ.26,316 கோடி செலவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார். தற்போதுள்ள 2ஜி பிஎஸ்என்எல்லை 4ஜிக்கு மேம்படுத்துவதும் இதில் அடங்கும். இது தவிர, தற்போதுள்ள 2,343 2G BTS ஐ 2G இலிருந்து 4G ஆக மேம்படுத்தும் பணியையும் BSNL செயல்படுத்தி வருகிறது, இதன் மதிப்பீடு ரூ.1,884.59 கோடி ஆகும்.
தொலைத்தொடர்புத் துறையில் தன்னிறைவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், 4G நெட்வொர்க் உபகரணங்களை உற்பத்தி செய்யும் உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா மாறியுள்ளது என்று கூறினார். நாட்டில் ஆத்மநிர்பர் நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.BSNL தனது 5G நெட்வொர்க்கை வெளியிடும்போது "சுதேசி" உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாகவும் அமைச்சர் சிந்தியா கூறினார்.
நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இந்தியாவில் நுழைந்தது குறித்து, வாடிக்கையாளர்களுக்கு பரந்த தேர்வை வழங்க அனைத்து வகையான தொழில்நுட்பங்களுக்கும் நுழைவாயில் திறந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.