ஒரு நிமிடத்தில் உங்கள் புகைப்படத்தை.. ஏஐ கேரிகேச்சராக மாற்றலாம்.. ஈசி ஸ்டெப்ஸ் இதோ

Published : Feb 10, 2026, 02:29 PM IST

சமூக ஊடகங்களில் வைரலாகும் ஏஐ கேரிகேச்சர் படங்களை சாட்ஜிபிடி மூலம் உருவாக்கும் முறை பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது. இந்த டிரெண்ட் தொழில்நுட்பத் திறன் தேவையில்லாமல், சில நொடிகளில் படங்களை உருவாக்குவதால் பிரபலமடைந்துள்ளது.

PREV
15
ஏஐ காரிகேச்சர் உருவாகும் முறை

சாட்ஜிபிடி மூலம் உருவாக்கப்படும் ஏஐ கேரிகேச்சர் படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. தங்களின் சாதாரண புகைப்படங்களை கார்ட்டூன் பாணியில் மாற்றிக் கொள்வதே இந்த டிரெண்ட். குறிப்பாக, ஒரே மாதிரியான ஃபில்டர்களுக்கு பதிலாக, தனிப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்தும் படங்கள் கிடைப்பதால் பயனர்கள் இதை அதிகம் விரும்புகின்றனர். இந்த ஏஐ கேரிகேச்சர் டிரெண்ட், ஒருவரின் தொழில், பழக்கவழக்கங்கள், தினசரி வாழ்க்கை முறை போன்றவற்றின் படங்களைக் கொண்டு உருவாக்குகிறது.

25
சாட்ஜிபிடி ட்ரெண்ட்

உதாரணமாக, செய்தியாளராக இருப்பவர் நோட்புக், மைக் உடன்; ஐடி துறையில் இருப்பவர் லேப்டாப், கோடிங் பின்னணியுடன்; கலை ஆர்வம் கொண்டவர் வண்ணமயமான சூழலில் கேரிகேச்சராக தோன்றலாம். இதனால் அந்த படம் “நான் தான் இது” என்று சொல்லும் அளவுக்கு தனிப்பட்டதாக இருக்கும். பயனர் தன் புகைப்படத்தை அப்லோடு செய்து, எந்த பாணியில் கேரிகேச்சர் வேண்டும் என்பதை ஒரு எளிய பிராம்ப்ட்டில் எழுதினால் போதும்.

35
வைரல் ஏஐ படங்கள்

ஏஐ முகத்தின் வடிவம், முகபாவனை, கண்கள், சிரிப்பு போன்ற அம்சங்களை பகுப்பாய்வு செய்து, சற்றே மிகைப்படுத்தப்பட்டாலும் அடையாளம் மாறாத வகையில் படத்தை உருவாக்குகிறது. இதனால் பலருக்கு வேடிக்கையான, சிலருக்கு ஆச்சரியமான ரிசல்ட்கள் கிடைக்கின்றன. இந்த டிரெண்ட் வைரலாக காரணம், இதில் எந்த டிசைன் திறனும் தேவையில்லை என்பதே.

45
சோசியல் மீடியாவில் வைரல்

ஓவியம் வரையத் தெரிந்தாலும், எடிட்டிங் மென்பொருள் பயன்படுத்தத் தெரிந்தாலும், ஒரு புகைப்படம் மற்றும் ஒரு வரி பிராம்ப்ட் இருந்தால் போதும். சில நொடிகளில் படம் தயாராகி விடுவதால், பலர் இதை தங்களின் DP-ஆகவும், ஸ்டோரி-ஆகவும் பகிரத் தொடங்கினர். பிராம்ப்ட்டில் பின்னணி, நிறங்கள், மனநிலை, பிடித்த பொருட்கள் போன்ற சிறிய விவரங்களை சேர்த்தால், கிடைக்கும் கேரிகேச்சர் இன்னும் அழகாகவும், தனித்துவமாகவும் இருக்கும். தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் ஒன்றாக இணையும் இந்த ஏஐ கேரிகேச்சர் டிரெண்ட், சமூக ஊடகங்களில் நம்மை வெளிப்படுத்தும் ஒரு புதிய கோணத்தை கொடுத்து வருகிறது.

55
வைரலாகும் கேரிகேச்சர் பிராம்ப்ட்

கேரிகேச்சர் உருவாக்க, முதலில் சாட்ஜிபிடி செயலி அல்லது இணையதளத்தைத் திறக்க வேண்டும். இலவசப் பதிப்பில் படம் உருவாக சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஒரு நாளில் உருவாக்கக்கூடிய காரிகேச்சர் படங்களுக்கும் வரம்பு உள்ளது. புதிய சாட்டில் “Create a caricature of me and my job based on everything you know about me” என்ற பிராம்ப்ட்டை வழங்குவதன் மூலம் நீங்கள் உங்களுக்கான கேரிகேச்சர் படத்தை பெறலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories