Presentation கல்லூரி அல்லது அலுவலக பிரசன்டேஷனில் அசத்த வேண்டுமா? கூகுள் ஜெமினி AI-யைப் பயன்படுத்தி ஸ்லைடு டிசைன், ஸ்கிரிப்ட் மற்றும் ஐடியாக்களைப் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் உள்ளே.
Presentation கூகுள் ஜெமினியின் இந்த 5 'Prompts' இருந்தால் போதும்... அரங்கமே அதிரும்!
கல்லூரி அசைன்மென்ட் ஆகட்டும் அல்லது அலுவலக மீட்டிங் ஆகட்டும், "பிரசன்டேஷன்" (Presentation) என்றாலே பலருக்கு கையும் ஓடும், காலும் ஓடும். என்ன பேசுவது? ஸ்லைடில் என்ன வைப்பது? என்று மணிக்கணக்கில் யோசித்துத் தலை வெடித்துவிடும். ஆனால், இனி அந்தக் கவலையே வேண்டாம். உங்கள் உதவியாளராகக் கூகுள் ஜெமினி (Google Gemini) இருக்கும்போது பயம் எதற்கு? உங்கள் அடுத்த பிரசன்டேஷனை 'வேற லெவலில்' மாற்ற உதவும் முக்கியமான பிராம்ப்டுகள் (Prompts) இதோ!
26
1. ஐடியா கிடைக்கவில்லையா?
சில நேரங்களில் தலைப்பு மட்டும் கையில் இருக்கும், ஆனால் அதை எப்படித் தொடங்குவது என்று தெரியாது. அப்போது ஜெமினியிடம் இப்படி கேளுங்கள்.
• Prompt: "I am a [Student/Professional] giving a presentation on [Topic]. Give me 5 unique and engaging angles to approach this topic."
• (நான் [தலைப்பு] பற்றி பிரசன்டேஷன் செய்யப் போகிறேன். இதை வித்தியாசமாக அணுக 5 ஐடியாக்களைக் கொடு).
இதை டைப் செய்தால், யாரும் யோசிக்காத கோணத்தில் ஜெமினி உங்களுக்கு ஐடியாக்களைக் கொடுக்கும்.
36
2. ஸ்லைடு வடிவமைப்பு
எந்த ஸ்லைடில் எதை வைப்பது என்ற குழப்பம் இருக்கிறதா? ஒரு முழுமையான அவுட்லைனை (Outline) நொடியில் பெறலாம்.
• Prompt: "Create a 10-slide presentation outline for [Topic]. Include a catchy introduction, key points, and a strong conclusion."
• (எனது தலைப்பிற்காக 10 ஸ்லைடுகள் கொண்ட ஒரு அவுட்லைனைத் தயார் செய். ஒரு ஈர்ப்பான முன்னுரை மற்றும் முடிவுரை அதில் இருக்கட்டும்).