Smartwatches Under 5,000: காலிங் முதல் ஆக்சிஜன் வரை.. ₹5,000 பட்ஜெட்டில் டாப் 5 வாட்ச்கள்!

Published : Jul 12, 2026, 04:39 PM IST

Smartwatches Under 5000: ஹார்ட் பீட், SpO2 மானிட்டரிங், சூப்பர் பேட்டரி லைஃப் என அசத்தும் Realme, boAt, CMF, Noise பிராண்டுகளின் ரூ.5,000 விலையில் டாப் 5 ஸ்மார்ட்வாட்ச்களை பற்றி பார்க்கலாம்.

PREV
18
TOP 5 Smartwatches Under 5,000

ஸ்மார்ட்வாட்ச்கள் இப்போதெல்லாம் நேரம் காட்டும் கருவி மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் பர்சனல் அசிஸ்டென்ட் ஆகவும் மாறிவிட்டன. ஹார்ட் பீட், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் காட்டும் SpO2, தூக்கத்தின் தரம் போன்ற பல அம்சங்கள் இப்போது பட்ஜெட் மாடல்களிலும் கிடைக்கின்றன.

இதையும் படிங்க: Best 5G Phones Under 10,000: தரமான டிஸ்பிளே, கேமரா & பேட்டரி கொண்ட டாப் 5G போன்கள்!

28
ஹெல்த் அலர்ட்: அசாதாரண மாற்றங்களை அறியலாம்

இவை மருத்துவ கருவிகளுக்கு மாற்று இல்லை என்றாலும், நமது உடல்நிலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிய இந்த வாட்ச்கள் உதவும். ரூ.5,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்வாட்ச்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இதையும் படிங்க: Avon E-Star Dx: லைசென்ஸ் தேவையில்லை.. 70 கிமீ ரேஞ்ச்.. ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சூப்பர் இ-ஸ்கூட்டர்!

38
Realme Watch 5: பெரிய டிஸ்ப்ளே, சூப்பர் பேட்டரி
Realme Watch 5-ன் விலை ரூ.4,299. இதில் 1.97 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த வாட்ச், இதயத் துடிப்பு, SpO2, தூக்கம், மன அழுத்தம் மற்றும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்கும். 108 ஸ்போர்ட்ஸ் மோடுகள், 300-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் இதில் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என நிறுவனம் கூறுகிறது.
48
boAt Chrome Iris: பட்ஜெட் விலையில் அசத்தல் ஃபீச்சர்ஸ்
boAt Chrome Iris வாட்ச்சின் விலை ரூ.3,499. இதில் 1.32 இன்ச் AMOLED ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, இதயத் துடிப்பு, SpO2 கண்காணிப்பு, தூக்கப் பகுப்பாய்வு, சுவாசப் பயிற்சி மோடுகள் மற்றும் ப்ளூடூத் காலிங் போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன. IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியும் உண்டு. பவர் சேவிங் மோடில் 5 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும் என நிறுவனம் குறிப்பிடுகிறது.
58
CMF Watch Pro 2: ஸ்டைலான டிசைன், நீடித்த பேட்டரி
Nothing நிறுவனத்தின் துணை பிராண்டான CMF வழங்கும் Watch Pro 2-ன் விலை ரூ.4,999. இந்த மாடலில் 1.32 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இதயத் துடிப்பு, SpO2 கண்காணிப்பு, 120-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகள் மற்றும் ப்ளூடூத் காலிங் வசதிகள் உள்ளன. IP68 பாதுகாப்பு மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி இதன் முக்கிய சிறப்பம்சங்கள்.
68
boAt Valor Watch 1R: ஃபிட்னஸ் பிரியர்களுக்கான சாய்ஸ்
boAt Valor Watch 1R-ன் விலை ரூ.4,499. இது 700-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளை வழங்குகிறது. இதயத் துடிப்பு, SpO2, ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (HRV), VO2 மேக்ஸ், தூக்கம், மன அழுத்தம் போன்றவற்றையும் இது கண்காணிக்கும். 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 7 முதல் 10 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் இந்த மாடலின் சிறப்பம்சங்கள். 3 ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதியும் இதில் உள்ளது.
78
Noise Colorfit Pro 5 Max: ஹெல்த் ஸ்மார்ட் ஃபீச்சர்ஸ்
Noise Colorfit Pro 5 Max-ன் விலை ரூ.4,999 முதல் தொடங்குகிறது. இதில் 1.96 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதயத் துடிப்பு, SpO2, தூக்கம், மன அழுத்தம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் வசதிகளுடன், 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளும், 150-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களும் இதில் உள்ளன. SOS ஃபீச்சர் மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும் என நிறுவனம் கூறுகிறது.
88
வாங்குறதுக்கு முன்னாடி இதைக் கவனிங்க!
இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் உடல்நலம் சம்பந்தமான பல தகவல்களைக் கொடுத்தாலும், இவற்றை மருத்துவப் பரிசோதனைகளுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. இதயத் துடிப்பு அல்லது ரத்த ஆக்சிஜன் அளவில் தொடர்ச்சியாக அசாதாரண மாற்றங்களைக் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். நல்ல டிஸ்ப்ளே, பேட்டரி லைஃப், ப்ளூடூத் காலிங், ஃபிட்னஸ் டிராக்கிங் என அனைத்தையும் ரூ.5,000-க்குள் விரும்புவோருக்கு இந்த மாடல்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories