Best Smartphones: இந்தியாவில் ரூ.10,000 விலைக்குள் மிகச்சிறந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரெட்மி A3, போக்கோ C65, சாம்சங் M05 உள்பட 5 ஸ்மார்போன்கள் குறித்து பார்க்கலாம்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை வழங்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குவது எளிதாகிவிட்டது. ரூ.10,000 என்ற பட்ஜெட்டில் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. இன்றைய நிலவரப்படி ரூ.10,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலையும் அவற்றின் சிறப்பம்சங்களையும் விரிவாக பார்ப்போம்.
25
1. ரெட்மி A3 (Redmi A3)
விலை: ரூ.7,499
ரெட்மி ஏ3 ஸ்மர்ட்போன் 6.71 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) வருகிறது. மீடியாடெக் ஹீலியோ G36 செயலி கொண்டுள்ள இந்த போன், 5000 mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
35
2. போக்கோ C65 (Poco C65)
விலை: ரூ. 8,499
போக்கோ C65 ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் எச்.டி பிளஸ் திரை மற்றும் 90Hz டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர் மூலம் இயக்கப்படும் இதில், 50 எம்.பி ஏஐ பிரதான கேமரா மற்றும் 5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா பயன்பாட்டிற்கு இந்த போன் மிகவும் உகந்தது.
சாம்சங் கேலக்ஸி M05 மாடல் போனில் 6.7 இன்ச் ஹெச்.டி பிளஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே மற்றும் மீடியாடெக் ஹீலியோ G85 செயலி இடம்பெற்றுள்ளது. 50 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்பு மற்றும் 25W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. நம்பகத்தன்மை விரும்புவோருக்கு இது சிறந்தது.
55
4. ரியல்மி நார்சோ N53 (Realme Narzo N53)
விலை: ரூ.8,999
ரியல்மி நார்சோ N53 மாடல் போன் 6.74 இன்ச் முழுமையான எச்டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. யுனிசாக் T612 செயலியுடன் செயல்படும் இதில், 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. மெல்லிய வடிவமைப்பைக் விரும்புவோருக்கு இது சரியான தேர்வாகும்.
5. மோட்டோ G04s (Moto G04s)
விலை: ரூ.7,699
மோட்டோ G04s ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெஃப்ரேஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. யுனிசாக் T606 செயலியுடன் இயங்கும் இந்த போன், டால்பி அட்மாஸ் சவுண்ட் தொழில்நுட்பம் மற்றும் 5000 mAh பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் ஸ்டைலில் இது தனித்து நிற்கிறது.
முக்கிய குறிப்பு: மேற்கண்ட ஸ்மார்ட்போன்களின் விலைகள் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களின் தள்ளுபடி சலுகைகளுக்கு ஏற்ப சிறிய மாற்றங்களுக்கு உட்படலாம். வாங்குவதற்கு முன் அருகிலுள்ள கடைகளிலோ அல்லது அதிகாரப்பூர்வ தளங்களிலோ விலையை சரிபார்க்கவும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.