ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களே... இனி 28 நாள், 84 நாள் ரீ-ஜார்ஜ் பேக் எல்லாம் கிடையாது; ட்ராய் அதிரடி!

Published : Sep 28, 2026, 05:38 PM IST

28 நாள் ரீசார்ஜுக்கு எண்ட் கார்டு. இனி போன் பேச மட்டும் தனியாக ரீசார்ஜ் செய்யலாம்; டிராயின் புதிய 30 நாள்கள் வேலிடிட்டி விதிகள் அறிமுகம். வாய்ஸ் மற்றும் SMS-க்கு மட்டும் தனி ரீசார்ஜ் திட்டம் கட்டாயம்: TRAI அதிரடி உத்தரவு!

PREV
14
இனி 28 நாள், 84 நாள் ரீ-ஜார்ஜ் பேக் எல்லாம் கிடையாது

மொபைல் போன் ரீசார்ஜ் திட்டங்களில் பெரும்பாலானவை 28 நாள்கள், 84 நாள்கள் என முழுமையான மாதக் கணக்கில் இல்லாமல் இருந்து வந்தன. அதுமட்டுமின்றி, குரல் அழைப்புகள் (Voice Calls) மட்டும் பேசினால் போதும் என்று நினைப்பவர்கள் கூட, கட்டாயமாக இணைய டேட்டா (Data) பேக்கேஜையும் சேர்த்துப் போட வேண்டிய நிலை நீடித்து வந்தது. இந்த நடைமுறைகளில் நுகர்வோருக்குச் சாதகமான புதிய மாற்றங்களைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) அதிரடியாக அறிவித்துள்ளது.

24
வாய்ஸ் & எஸ்.எம்.எஸ்-க்கு மட்டும் தனித் திட்டம்!

இதுவரை பெரும்பாலான மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் அழைப்புகள், SMS மற்றும் இணைய டேட்டா ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டே (Bundled Packs) வழங்கப்பட்டு வந்தன. இதனால், இணையத்தைப் பயன்படுத்தாத பயனாளர்களும் தங்களுக்குத் தேவையில்லாத இணைய டேட்டாவுக்கான கட்டணத்தையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தச் சூழலை மாற்றும் வகையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி குரல் அழைப்பு (Voice) மற்றும் SMS சேவைகளுக்கு மட்டும் பிரத்யேகமான தனி ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று டிராய் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், "எனக்கு போன் பேசினால் மட்டும் போதும்" என்று நினைக்கும் வாடிக்கையாளர்கள், தங்களுக்குத் தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

34
28 நாள்கள் முறைக்கு முடிவு: 30 நாள்கள் வேலிடிட்டி கட்டாயம்

மொபைல் பயனாளர்களிடம் நீண்ட காலமாக இருந்து வந்த மற்றொரு முக்கியமான அதிருப்தி, 28 நாள்கள் மட்டுமே செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்கள் ஆகும். ஒரு மாதம் என்று நினைத்து ரீசார்ஜ் செய்தாலும், 28 நாள்களிலேயே வேலிடிட்டி முடிந்து மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால், ஒரு ஆண்டில் 12 முறை ரீசார்ஜ் செய்வதற்குப் பதிலாக, நுகர்வோர் 13 முறை வரை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கூடுதல் சுமை ஏற்பட்டது.

இக்குறையைக் களையும் வகையில், இனி நிறுவனங்கள் முழுமையாக 30 நாள்கள் செல்லுபடியாகும் (30 Days Validity) திட்டங்களையும் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

44
இந்த மாற்றத்தால் யாருக்கெல்லாம் அதிகப் பயன்?

டிராயின் இந்த புதிய வழிகாட்டுதல் மூலம் பல்வேறு தரப்பினரும் நேரடிப் பலன்களைப் பெற உள்ளனர். தங்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் போனில் பேசுவதற்காக மட்டுமே மொபைல் பயன்படுத்தும் முதியவர்களுக்கு, டேட்டா இல்லாத குறைந்த கட்டணத் திட்டங்கள் பெரும் நிம்மதியைத் தரும்.

இணையப் பயன்பாடு குறைவாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், குறைந்த செலவில் தங்களுக்குத் தேவையான மொபைல் அழைப்புச் சேவையைப் பெற இது உதவும். அவசர காலப் பயன்பாட்டிற்காக மட்டும் கூடுதல் சிம் வைத்திருப்பவர்கள், தேவையில்லாத டேட்டாவுக்காக வீண் செலவு செய்வது குறையும். கட்டாயத் தொகுப்பு முறையின்றி, பயனாளர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப குறைந்த விலைத் திட்டங்களைத் தேர்வு செய்யும் உரிமை கிடைத்துள்ளது.

டிராயின் புதிய விதிமுறைகளைப் பின்பற்றி, ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடஃபோன் ஐடியா (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வழக்கமான ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ள புதிய திட்டங்களின் விலை, செல்லுபடியாகும் காலம் மற்றும் சேவைகளின் முழு விவரங்கள் என்னவாக இருக்கும் என்பதை நுகர்வோர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories