பட்ஜெட் ஸ்மார்ட் போன் வாங்கப்போறீங்களா?.. 15,000க்குள் டக்கரா 5 போன் இருக்கு - அதுவும் 5G - வாங்க பாக்கலாம்!

First Published | Aug 28, 2023, 1:21 PM IST

இந்த 2023ம் ஆண்டில் ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர், குறிப்பாக 15,000 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான விலையில் ஓப்போ, ரெட்மி, விவோ போன்ற பல முன்னணி போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் ஃபோன்களை அறிமுகம் செய்துள்ளது, அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Redmi 12 5G Smart Phone

Redmi 12 5G 

இதுவரை ரெட்மி வெளியிட்ட பல 5g ஃபோன்களில் பெரிய அளவில் மக்களால் விரும்பப்பட்ட ஒரு ஃபோனாக மாறி உள்ளது ரெட்மி 12. இது 5g மற்றும் 4g ஆகிய இரு வேறுபாடுகளில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 15ஆம் தேதி வெளியான இந்த போன் குறித்து பின்வருமாறு காணலாம். 

இதன் அளவு 168.6 x 76.3 x 8.2 mm ஆகும், மேலும் இதை எடை சுமார் 198.5g, கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பிரேம் கொண்டு இந்த புதிய மாடல் போன் உருவாக்கப்பட்டுள்ளது. Hybrid Dual SIM கொண்ட போனில் IP53, தூசு மற்றும் தண்ணீர் அளவை தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிலே அளவு 6.79 inches, மேலும் Android 13 மற்றும் MIUI 14 OS கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் இதன் விலை சுமார் 12,999 (4GB RAM + 128 GB) மற்றும் 14,999 (6GB RAM + 128 GB) ஆகும்.

iQOO : பட்டையை கிளப்ப வரும் ஐக்யூவின் 3 ஸ்மார்ட்போன்கள்.. A முதல் Z வரை முழு தகவல்கள் இதோ !!

Tecno Pova 5 Pro 5G Smart Phone

TECNO Pova 5 Pro

இது டெக்னா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட ஒரு 5 G வகை போனாகும், இதன் 8 GB RAM + 1286 GB வகை 14,999 ரூபாய்க்கும். அதேபோல 8 GB RAM + 256 GB வேரியண்ட் சுமார் 15,999 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.

இதன் அளவு 168.5 x 76.5 x 9 mm ஆகும், மேலும் இதை எடை சுமார் 220g, கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பிரேம் கொண்டு இந்த புதிய மாடல் போன் உருவாக்கப்பட்டுள்ளது. Dual SIM கொண்ட போனின் டிஸ்பிலே அளவு 6.78 inches, மேலும் Android 13 மற்றும் HIOS 13 OS கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Latest Videos


VIVO Y27 5G 

விவோ இந்த புதிய போனை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது, இதன் (6GB RAM + 128 GB) வேரியண்ட் 14,999 என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அளவு 164.1 x 76.2 x 8.1 mm ஆகும், மேலும் இதை எடை சுமார் 190g, கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பிரேம் கொண்டு இந்த புதிய மாடல் போன் உருவாக்கப்பட்டுள்ளது. Dual SIM கொண்ட போனின் டிஸ்பிலே அளவு 6.64 inches, மேலும் இது Android 13 மற்றும் Funtouch13 OS கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

POCO M6 5G Smart Phone

POCO M6 Pro 5G​

போக்கோ நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இந்த போனை அறிமுகம் செய்தது, மக்கள் மத்தியில் இந்த போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இதன் அளவு 168.6 x 76.3 x 8.2 mm ஆகும், மேலும் இதை எடை சுமார் 199g, கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பிரேம் கொண்டு இந்த புதிய மாடல் போன் உருவாக்கப்பட்டுள்ளது. Hybrid Dual SIM கொண்ட போனில் IP53, தூசு மற்றும் தண்ணீர் அளவை தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிலே அளவு 6.79 inches, மேலும் Android 13 மற்றும் MIUI 14 OS கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் இதன் விலை சுமார் 12,999 (4GB RAM + 64 GB ROM) மற்றும் 10,999 (6GB RAM + 128 GB) 12,999க்கும் விற்பனையாகிறது.

OPPO A58 5G Smart Phone

OPPO A58 5G 

இந்த மடல் போனை கடந்த ஆண்டு இறுதியில் அந்நிறுவனம் வெளியிட்டது, மேலும் இதில் உள்ள 6 GB RAM + 128 GB ROM) வேரியண்ட் அப்போது 14,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

இதன் அளவு 163.8 x 75 x 8 mm ஆகும், மேலும் இதை எடை சுமார் 188g, Dual SIM கொண்ட போனில் IP54, தூசு மற்றும் தண்ணீர் அளவை தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிலே அளவு 6.56 inches, மேலும் Android 12 OS கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் 84 நாட்களுக்கு இலவசம்.. ஜியோ ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதும்.. முழு விபரம் இதோ !!

click me!