Best 5G Mobile Under 10000: இந்தியாவில் ரூ.10.000க்குள் கிடைக்கும் டாப் 5 5G போன்கள் குறித்தும், அவற்றின் சிறப்பம்சஙகள் குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
இன்றைய நவீன உலகம் ஸ்மார்ட்போன்கள் வசமாகி விட்டது. இளசுகள் முதல் பெருசுகள் வரை போன்கள் இல்லாமல் யாரும் இல்லை. இப்போது 5G காலம் என்பதால் அனைவரும் 4G போன்களைத் தவிர்த்துவிட்டு 5G போன்களை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். முன்பெல்லாம் 5G போன்கள் 15,000 ரூபாய்க்கு மேல் விற்பனையான நிலையில், இப்போது 5G போன்கள் 10,000 ரூபாய்க்குள் கிடைக்கிறது. ரூ.10,000க்குள் கிடைக்கும் டாப் 5 5G போன்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
26
லாவா ஸ்டார்ம் லைட் 5G (Lava Storm Lite 5G)
இந்திய நிறுவனமான லாவா குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி அசத்தி வருகிறது. லாவா ஸ்டார்ம் லைட் 5G போனின் விலை ரூ.7,999 மட்டுமே இந்த போனில் 50MP பிரதான கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் MediaTek Dimensity 6400 சிப்செட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. நீங்கள் மிகக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு 5G போனைத் தேடுகிறீர்கள் என்றால் Lava Storm Lite 5G சிறந்த தேர்வாகும்.
36
போக்கோ M6 5G (Poco M6 5G)
தரமான மாடல்களில் போக்கோ எப்போதும் முன்னிலையில் வரும். போக்கோ M6 5G மாடலின் 4GB/64GB வேரியண்ட் தற்போது ஆஃபர்களில் ₹8,999 முதல் கிடைக்கிறது. இதில் 6.74 இன்ச் பெரிய டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் டிசைன் மற்றும் வேகமான 5G கனெக்டிவிட்டி மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட் ஆகும்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 13C 5G போன் இந்திய சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போனில் 90Hz டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி அம்சங்கள் உள்ளன. ரெட்மி நிறுவனத்தின் நம்பகமான மென்பொருள் மற்றும் பரவலான சர்வீஸ் சென்டர் வசதி இதன் பிளஸ் பாய்ண்டாக உள்ளது. இந்த போனின் விலை ரூ.9,499 ஆகும்.
56
சாம்சங் கேலக்ஸி M06 5G (Samsung Galaxy M06 5G)
சாம்சங் கேலக்ஸி M06 5G போன் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த மாடலில் 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது நீண்ட நேரம் சார்ஜிங் தக்க வைக்கும். 4 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் விலை ரூ.9,999 ஆகும்.
66
மோட்டோ G35 5G (Moto G35 5G)
ஸ்டாக் ஆண்ட்ராய்டு (Stock Android) விரும்புபவர்களுக்காக மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G35 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் சவுண்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள் என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இதன் விலை ₹9,999 முதல் தொடங்குகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.