ஒன்ப்ளஸ் முதல் ரெட்மி வரை.. எல்லா மொபைல் விலை அதிகமாயிடுச்சு.. எவ்வளவு?

Published : May 03, 2026, 12:12 PM IST

இந்தியாவில் ஒன்ப்ளஸ், ரியல்மி, ரெட்மி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தியுள்ளன. இதனால், புதிய போன் வாங்குவோர் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

PREV
15
மொபைல் விலை உயர்வு

இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவது இப்போது முந்தையதை விட சற்று அதிக செலவாகிவிட்டது. ஒன்ப்ளஸ், ரியல்மி, ரெட்மி, நத்திங் போன்ற முன்னணி நிறுவனங்கள், தங்களது பல மாடல்களின் விலையை அமைதியாக உயர்த்தியுள்ளன. புதிய போன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இதை கவனிக்க வேண்டியது அவசியம். சரியான நேரத்தில் முடிவு எடுக்கவில்லை என்றால், மேலும் அதிகம் செலவாக வாய்ப்பு உள்ளது.

25
சிப் பற்றாக்குறை

இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணம் உலகளாவிய சப்ளை சிக்கல்களும், நினைவக (நினைவக) சிப்களின் பற்றாக்குறையும் தான். DRAM, NAND போன்ற முக்கிய கூறுகளின் உற்பத்தி குறைந்து, அதே சமயம் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் RAM மற்றும் GPU-களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கூறுகளின் விலை உயர்ந்தது, இறுதியில் அந்த வாடிக்கையாளர்களின் செலவிலும் பிரதிபலிக்கிறது.

35
ஒன்ப்ளஸ் மொபைல் விலை

இந்த மாற்றம் அதிகமாகப் பாதித்தது ப்ரீமியம் பிரிவை. ஒன்ப்ளஸ் தனது புதிய மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஒன்ப்ளஸ் 15 இப்போது ரூ.77,999 முதல் தொடங்குகிறது; மேலும் ஒன்ப்ளஸ் 15R விலையும் ரூ.52,999 வரை உயர்ந்துள்ளது. நத்திங் நிறுவனமும் தனது Phone 4A Pro, Phone 4A மற்றும் 3A Lite மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. குறிப்பாக 3A Lite மாடலுக்கு இது இரண்டாவது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

45
ரெட்மி மொபைல் விலை

இதே பாதையில் ரியல்மி நிறுவனமும் நகர்கிறது. ரியல்மி 16 Pro+ மற்றும் 16 Pro மாடல்களின் விலைகள் ரூ.5,000 வரை உயர்ந்துள்ளன. இதுமட்டுமல்லாமல், பட்ஜெட் முதல் பிரீமியம் வரை பல மாடல்களில் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். ரெட்மி-யும் அந்த நோட் சீரிஸ் மாடல்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 15 Pro+ மற்றும் நோட் 15 Pro ஆகியவை இப்போது அதிக விலையில் கிடைக்கின்றன.

55
ஸ்மார்ட்போன் விலை அதிகரிப்பு

இந்த சூழலில், புதிய போன் வாங்க திட்டமிட்டவர்கள் மேலும் தாமதிக்காமல் முடிவு எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நினைவக சிப்களின் பற்றாக்குறை மற்றும் ஏஐ தேவைகள் குறையும் வாய்ப்பு அருகில் தெரியவில்லை. இதனால், வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல நிறுவனங்களின் விலையை உயர்த்தலாம். குறிப்பாக பண்டிகை காலத்திற்கு முன் புதிய விலைப்பட்டியல் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடல் தேர்வு செய்து உடனே வாங்கினால் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories