நிர்வாகத்தின் கவலைகள்:
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட அறிக்கையின்படி, டெஸ்லா நிர்வாகம் எலான் மஸ்க்கு பதிலாக ஒருவரை நியமிக்க தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் அரசு செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக மஸ்க் செயல்படுவது டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து அவரது கவனத்தை திசை திருப்புவதாக நிர்வாகம் கருதுகிறது. மேலும், டெஸ்லா நிறுவனத்தின் காலாண்டு லாபம் 71% குறைந்துள்ளது மற்றும் விற்பனையும் சரிந்துள்ளது. இதனால், நிறுவனத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல புதிய தலைமை தேவை என்று நிர்வாகம் நம்புகிறது.