டெலிகிராம் பயனர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், மிகவும் கோரப்பட்ட அம்சம் ஜூலை தொடக்கத்தில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். டெலிகிராமில் ஸ்டோரிகளை வைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக டெலிகிராம் பயனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், டெலிகிராம் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதையும், பயனர்கள் தங்கள் தருணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய டெலிகிராமின் ஸ்டோரி ஆனது, பயனர்கள் தங்கள் ஸ்டோரிகளுக்கு தலைப்புகளை வழங்கவும், இணைப்புகளைச் சேர்க்கவும் முடியும். முன் மற்றும் பின்பக்க கேமராக்களால் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.