Samsung Galaxy M34 5G : நோ ஷேக் கேமரா.. செம பேட்டரி.! மாஸ் கம்பேக் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி M34 5G

First Published Jun 27, 2023, 7:15 PM IST

சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) M34 5G ஜூலை 7 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் M34 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் Galaxy M தொடரில் புதிய மாறுபாட்டை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. 6,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமரா கொண்டுள்ளது. சாம்சங் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான Galaxy M34 5G ஐ இந்தியாவில் ஜூலை 7 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

Galaxy M34 5G ஆனது அதன் Monster 120Hz Super AMOLED டிஸ்ப்ளே மூலம் பயனர்களுக்கு இணையற்ற பார்வை அனுபவத்தை வழங்கும் என்று சாம்சங் கூறுகிறது. ஸ்மார்ட்போனின் விஷன் பூஸ்டர் தொழில்நுட்பம் பிரகாசமான சூரிய ஒளியில் கூட நல்ல கிளாரிட்டி தரும் என்று கூறியுள்ளது. 120Hz ரீபிரெஷ் ரேட், 50MP (OIS) நோ ஷேக் கேமரா உடன் வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கேமரா படங்கள் மற்றும் வீடியோக்களை கை நடுக்கம் அல்லது தற்செயலாக அசைப்பதால் ஏற்படும் மங்கலாக இல்லாமல் படம்பிடிக்க உதவும். சாம்சங் மான்ஸ்டர் ஷாட் 2.0 அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. இது புகைப்பட அனுபவத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறது. இந்த அம்சம் பயனர்கள் ஒரே ஷாட்டில் நான்கு வீடியோக்கள் மற்றும் நான்கு புகைப்படங்களைப் பிடிக்க அனுமதிக்கிறது.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

மேலும், Galaxy M34 5G இன் ஃபன் மோட் 16 இன்பில்ட் லென்ஸ் விளைவுகளை வழங்குகிறது. Galaxy M34 5G இன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் பிரிவில் முன்னணி 6,000mAh பேட்டரி ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கேமிங் மற்றும் அதிக நேரம் பார்ப்பது போன்றவற்றில் ஈடுபடலாம்.

Galaxy M34 5G அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சாம்சங் பேட்டரி ஆயுள், கேமரா திறன்கள் மற்றும் காட்சி தரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும்  சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெளிவாக தெரிகிறது. விஷன் பூஸ்டர் தொழில்நுட்பம் மற்றும் மான்ஸ்டர் ஷாட் 2.0 போன்ற புதுமையான அம்சங்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று உறுதியாக கூறலாம்.

Oppo Reno 10 : பட்டையை கிளப்பும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ.. இந்தியாவில் அறிமுகமாகும் Oppo ரெனோ 10 சீரிஸ்

click me!