அடிமட்ட ரேட்டில் 6500mAh பேட்டரி.. AI அம்சங்களுடன் 5ஜி போன்.. விலை, அம்சங்கள் இதோ

Published : Apr 20, 2026, 07:31 PM IST

டெக்னோ தனது புதிய டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், மற்றும் MediaTek Dimensity 6400 சிப் போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருகிறது.

PREV
14
டெக்னோ பாப் எக்ஸ் மொபைல்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பயனர்களை குறிவைத்து டெக்னோ தனது புதிய டெக்னோ பாப் எக்ஸ் 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் வெளியான டெக்னோ Spark 50 வடிவமைப்பை ஒத்த ஸ்டைலில் இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பில்-வடிவ (மாத்திரை வடிவ) கேமரா மாட்யூல், தனித்தனி சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் அமைப்பு இதன் லுக்கை மெருகூட்டுகிறது. இந்த மாடல் வரும் ஏப்ரல் 24 முதல் Amazon தளத்தில் விற்பனைக்கு வரும்.

24
பட்ஜெட் ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பிரைட்னஸ் மூலம், வீடியோ மற்றும் கேமிங் அனுபவம் ஸ்மூத் ஆக இருக்கும். இந்த போன் MediaTek Dimensity 6400 சிப் மூலம் இயங்குகிறது. 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும். மேலும், Microsoft SD கார்டு மூலம் 2TB வரை நினைவகத்தை அதிகரிக்க முடியும் என்பது ஒரு பெரிய பிளஸ்.

34
டெக்னோ போன் அம்சங்கள்

புகைப்படங்களுக்கு 13MP பின்புற கேமரா மற்றும் 8MP முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த போனின் ஹீரோ அம்சம் அதன் 6,500mAh பேட்டரிதான். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருந்தால், நீண்ட நேரம் பயன்படுத்தினால் சார்ஜ் பிரச்சனை இருக்காது. இதோடு, ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான HiOS 16, பக்கவாட்டு கைரேகை சென்சார், IP64 பாதுகாப்பு மற்றும் டிராப்-டெஸ்ட் செய்யப்பட்ட உறுதி ஆகியவை சேர்ந்து, பயனர்களுக்கு நம்பகமான அனுபவத்தைத் தருகின்றன.

44
பாப் எக்ஸ் மொபைல் விலை

மேலும், ‘FreeLink Communication’ என்ற புதிய வசதி இந்த போனில் இடம்பெற்றுள்ளது. நெட்வொர்க் இல்லாத சூழலிலும் அருகிலுள்ள சாதனங்களுடன் 1.5 கிமீ வரை அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் ஃபைல்கள் பகிர முடியும். இதோடு AI நாய்ஸ் கேன்சலேஷன், AI ரைட்டிங் அசிஸ்டன்ட், AI இமேஜ் டூல்கள் போன்ற பல ஸ்மார்ட் அம்சங்களும் உள்ளன. விலையைப் பார்த்தால், 4GB + 128GB வேரியன்ட் ரூ.15,999க்கும், 6GB + 128GB வேரியன்ட் ரூ.17,999க்கும் கிடைக்கிறது. பட்ஜெட்டில் அதிக அம்சங்கள் தேவைப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories