ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

First Published | May 2, 2023, 7:15 PM IST

சிறந்த பட்ஜெட் போனை வாங்க விரும்புகிறீர்களா அல்லது ஏற்கனவே உள்ள ஸ்மார்ட்போனை மாற்ற விரும்புகிறீர்களா ? சூப்பரான மொபைல், அதுவும் 20000க்கும் கீழ் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்ஃபோன்களை இங்கு பார்க்கலாம்.

OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G மொபைல் ஆனது 20000க்கு கீழ் இருக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்ஃபோன் ஆகும். இது EIS உடன் 64 MP மெயின் கேமராவுடன் வருகிறது.  ஒரு 2MP டெப்த் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் இருக்கிறது. 30 fps இல் 1080P வீடியோ, Qualcomm snapdragon 695 5G பிராசஸர் மற்றும் 5000 mAh பேட்டரியுடன் வரும் இதன் விலை 18,999 ஆகும்.

Redmi Note 11T 5G

20000 க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் என்று வரும்போது Redmi எப்போதும் வாடிக்கையாளர்களின் சிறந்த சாய்ஸ் ஆக உள்ளது. MediaTek Dimensity 810 Octa-core 5G பிராசஸர், 6nm HyperEngine 2.0 போன்ற வசதிகளை கொண்டுள்ளது. மற்றும் 2.4GHz வரை கடிகார வேகத்துடன் வருகிறது. 2 மாதங்களுக்கு Youtube பிரீமியம் இலவசம்.இந்த மொபைல் விலை 18,499 ஆகும்.

Tap to resize

Samsung galaxy M33 5G

சாம்சங் கேலக்ஸி M33, இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த 5G மொபைல்களில் ஒன்றாகும். இது Exynos 1280 Octa-core 2.4GHz 5 nm செயலியுடன் 12 பேண்ட் ஆதரவுடன் உண்மையான 5G அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் உள்ள OneUI 4 உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்தும். Samsung Galaxy M33 5G மொபைல் விலை 19,499 ஆகும்.

Realme Narzo 50

20,000 க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன் லிஸ்டில் ரியல்மியும் இருக்கிறது. இது Octa-core Mediatek Helio G96 கேமிங் பிராசஸருடன் வருகிறது. கேமிங்குக்கு சிறந்த மொபைல் இதுதான். சக்திவாய்ந்த Mali- G57 MC2 GPU, 120Hz ரெப்ரெஷ் ரேட், 5000mAh பேட்டரி போன்ற பல அம்சங்களை கொண்டு வரும் இதன் விலை 15,499 ஆகும்.

OPPO A15s AI டிரிபிள் கேமரா

OPPO A15s AI ஃபேஸ் அன்லாக் ஐ - கம்ஃபர்ட் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கலர் ஓஎஸ் 7.2 ஆனது 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டாகோர் செயலியுடன் ஆண்ட்ராய்டு பதிப்பு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் விலை 11,490 ஆகும். இந்த பட்டியலில் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் இதுதான்.

Latest Videos

click me!