Redmi A4 5G: Xiaomi நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் ரூ.10,000க்கும் குறைவான விலையில் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்து இருந்தது. அதன்படி Xiaomiஇன் Redmi A4 5G இப்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் முதல் Snapdragon 4s Gen 2 தொலைபேசியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செல்போன் நவம்பர் 27 முதல் mi.com, Amazon India, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும்.