ஐபோன் வாங்க ரூ.40,000 வரை தள்ளுபடி! அனல் பறக்கும் பிளிப்கார்ட் சேல்!

First Published | Oct 12, 2024, 11:34 AM IST

பிளிப்கார்ட் (Flipkart) இன் பிக் ஷாப்பிங் உத்சவ் (Big Shopping Utsav) சிறப்பு விற்பனையில் iPhone 15, iPhone 15 Plus ஆகியவற்றிற்கு அதிக தள்ளுபடி கிடைக்கிறது.

iPhone offer on Big Shopping Utsav

பிளிப்கார்ட் (Flipkart) இன் பிக் ஷாப்பிங் உத்சவ் (Big Shopping Utsav) சிறப்பு விற்பனையில் iPhone 15, iPhone 15 Plus ஆகியவற்றிற்கு அதிக தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.27,000 வரை சேமிக்க முடியும். ஐபோன் 15 விலை ரூ.57,999 இல் இருந்து ஆரம்பமாகிறது. ஐபோன் 15 பிளஸ் ரூ.55,999 முதல் கிடைக்கிறது. இத்துடன் சில வங்கி கார்டுகள் மூலம் கூடுதல் தள்ளுபடி பெறலாம்.

iPhone 15 series smartphones

பிக் பில்லியன் டேஸ் விற்பனையைத் தவறவிட்டவர்கள், பிக் ஷாப்பிங் உத்சவில் ஆப்பிள் ஐபோன் வாங்க மற்றொரு வாய்ப்பை ஃபிளிப்கார்ட் அளித்துள்ளது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஆகியவற்றை அதிக தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. ஐபோன் 15 சீரிஸின் விலையை ரூ.27,000 வரை குறைத்துள்ளது. iPhone 16 க்குப் பதிலாக வேறு ஐபோன்களை விரும்பும் பயனர்களுக்கு இது சரியான வாய்ப்பாக இருக்கும்.

Tap to resize

iPhone 15 price

​​ஐபோன் 15, அசல் விலை ரூ.79,990. இந்த விற்பனையின் போது, வெறும் ரூ.57,999 க்கு கிடைக்கிறது. சில வங்கிக் கார்டுகள் மூலம் கூடுதல் தள்ளுபடி பெறலாம். எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழியாக மேலும் விலையைக் குறைக்கலாம். இந்தச் சலுகைகளையும் பயன்படுத்தினால் ரூ.52,499 வரை விலை குறையும்.

iPhone 15 on Flipkart

தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தும்போது கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். பழைய மொபைலை மாற்றும்போது ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். இந்தச் சிறப்புச் சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் இதை பயன்படுத்தி ஆர்டர் செய்துகொள்வது நல்லது.

iPhone 15 Plus

ஐபோன் 15 பிளஸ் வாங்க ஆர்வமுள்ளவர்களுக்காக, பிளிப்கார்ட் அதன் விலையையும் குறைத்துள்ளது. ஐபோன் 16 அறிமுகத்திற்குப் பிறகு, ஐபோன் 15 பிளஸின் விலை ரூ.65,999 ஆகக் குறைந்தது. இருப்பினும், பிக் ஷாப்பிங் உத்சவ் மூலம், ரூ.55,999 க்கு வாங்கலாம். மேலும் சில வங்கி கார்டுகள் மூலம் ரூ.4,750 தள்ளுபடி பெறலாம். ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம்.

iPhone 15 series

ஐபோன் 15 ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொண்டது. அதே சமயம் ஐபோன் 15 பிளஸ் 6.7 இன்ச் டிஸ்பிளே கொண்டது. இரண்டு மாடல்களும் HDR ஆதரவுடன் OLED பேனல்களைப் பெற்றுள்ளன. இரண்டு மாடல்களும் பிரத்யேகமான கேமரா அப்டேட்டுடன் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 48MP முதன்மை சென்சார் உள்ளது. முந்தைய iPhone 14 மாடலில் 12MP முதன்மை கேமரா இருந்தது. பேட்டரியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட USB Type-C சார்ஜிங் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

iPhone 13 offer

2021ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட iPhone 13 இப்போது பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. தற்போது இதன் விலை ரூ.40,999. வங்கிச் சலுகைகள் மூலம் ரூ.39,749 வரை விலை குறையும். பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அதை எக்ஸ்சேஜ் செய்து இன்னும் விலையைக் குறைக்கலாம். ஐபோன் 13 உற்பத்தி சமீபத்தில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!