சில நிமிடங்களில் 100%! சூப்பர் ஸ்பீடு சார்ஜிங் வசதியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்!

First Published | Aug 25, 2024, 9:47 PM IST

நவீன வாழ்க்கையின் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் மிக சில நிமிடங்களிலேயே பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போன்களும் வந்துவிட்டன. அந்த வகையில் டாப் 5 மொபைல்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

Realme GT5 Pro

செப்டம்பர் 2023 இல் வெளியிடப்பட்ட Realme GT5 மிக வேகமாக சார்ஜ் செய்யும் மொபைல் போனாக உள்ளது. இது இரண்டு சார்ஜிங் வேரியண்டில் கிடைக்கிறது. ஒன்று Realme GT5 150W, மற்றொன்று Realme GT5 240W. 240W மாடல் வெறும் 80 வினாடிகளில் 1 முதல் 20% வரை சார்ஜ் ஏறிவிடும். 100% சார்ஜ் செய்வதற்கு 10 நிமிடங்களுக்குள் தான் ஆகும்.

Redmi Note 12 Explorer

ரெட்மீ நோட் 12 எக்ஸ்புளோரர் 210W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் திறனைக் கொண்டுள்ளது. இது 4,300 mAh பேட்டரியை 9 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

Latest Videos


OnePlus 10T

ஒன்பிளஸ் 10T மற்றொரு ஃபாஸ்டு சார்ஜிங் ஸ்மாட்ர்போன். இது 150W வேகமான சார்ஜிங் திறன் கொண்டது. இது 4,800 mAh பேட்டரியை 18 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

Xiaomi 14 Pro

சியோமி 14 ப்ரோ 120W ஃபாஸ்ட் சார்ஜ் அம்சத்தை வழங்கும் மொபைல் போன்களில் ஒன்று.  இது சராசரியாக 22 முதல் 27 நிமிடங்களில் பேட்டரியை 100% ரீசார்ஜ் செய்ய உதவுகிறது.

Motorola Edge 40 Pro

மோட்டோரோலா எட்ஜ் 40 ப்ரோ ஸ்மார்ட்போன் 125W வேகமான சார்ஜிங் திறனைக் கொண்டுள்ளது. இது வெறும் 23 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும். சுமார் 6 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகிவிடும்.

click me!