லேட்டஸ்டு ஐபோனுக்கு ரூ.10,000 தள்ளுபடி தரும் ஜெப்டோ! தீபாவளி ஆஃபரை யூஸ் பண்ணிக்கோங்க!

First Published | Oct 24, 2024, 2:46 PM IST

iPhone 16 discount on Zepto: ஜெப்டோ (Zepto) ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்டு ஸ்மார்ட்போனான ஐபோன் 16 க்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்குகிறது. தீபாவளி சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே கிடைக்கும்.

iPhone 16 discount on Zepto

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்டு ஸ்மார்ட்போனான ஐபோன் 16 க்கு ரூ.10,000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஜெப்டோ (Zepto) வழங்கும் இந்த தீபாவளி சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே.

இந்த தள்ளுபடி அனைத்து ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) மாடல்களுக்கும் பொருந்தும். இது எந்த வங்கி சலுகையையும் உள்ளடக்கியது அல்ல.

iPhone 16 discount

ஜெப்டோ (Zepto) ஐபோன் 16 மொபைலை ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள் இலவச டோர் டெலிவரி செய்வதாகவும் கூறுகிறது. விஜய் சேல்ஸ் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தையும் நடத்தி வருகிறது. உங்களிடம் பழைய மொபைல் இருந்தால், அதைக் கொடுத்து ஐபோன் 16 க்கு இன்னும் அதிக தள்ளுபடி பெறலாம்.

Tap to resize

iPhone 16 series

ஐபோன் 16 ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த A18 சிப்பைக் கொண்டுள்ளது. கேமிங், மில்டி டாஸ்கிங் ஆகியவற்றுக்கு ஏற்ற செயல்திறன் மற்றும் ஆற்றல் கொண்டது.

இது மேக்ரோ படங்களுக்கான 2x டெலிஃபோட்டோ ஜூம் மற்றும் அல்ட்ரா வைட் லென்ஸுடன் 48MP ஃப்யூஷன் கேமராவைக் கொண்டுள்ளது. 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே துடிப்பான காட்சிகளை வழங்கும்.

iPhone 16 offer

ஐபோன் 16 நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு வடிவமைப்புடன் ஐந்து வண்ணங்களில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு உள்ளன.

iPhone 16 price

ஐபோன் 16 சீரிஸ் மொபைல்களில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ஆக்‌ஷன்ஸ் பட்டன் கேமரா மற்றும் ஃப்ளாஷ்லைட் போன்ற பல செயல்பாடுகளை விரைவாக அணுக உதவுகிறது. இதன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் அப்டேட் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Latest Videos

click me!