புதிய ஜியோ பாரத் செல்போன்கள் அறிமுகம்! இதுலயே ஆன்லைன் பேமெண்ட் பண்ணலாம்!

First Published Oct 15, 2024, 4:49 PM IST

ரிலையன்ஸ் ஜியோ தனது சமீபத்திய 4G ஃபீச்சர் போன்களான ஜியோ பாரத் V3 மற்றும் ஜியோ பாரத் V4 என ஆகிய மொபைல் போன்களை இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) 2024 நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

JioBharat V3 V4

ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ பாரத் ஃபீச்சர் போன் வரிசையில் புதிதாக V3 மற்றும் V4 என அழைக்கப்படும் 4G போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மொபைல் காங்கிரஸ் (ஐஎம்சி) 2024 நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை இவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த போன்கள் மூலம் 2G பயனர்கள் மலிவு விலையில் 4G சேவைகளை அனுபவிக்க முடியும் என ஜியோ நிறுவனம் கூறுகிறது. 4G ஃபீச்சர் ஃபோன்கள் JioPay செயலியைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் UPI பேமெண்ட் வசதியும் கிடைக்கும். லைவ் டிவி மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் ஆகியவற்றுக்கான ரீசார்ஜ் திட்டமும் கிடைக்கிறது.

JioBharat Feature Phones

JioBharat V3 மற்றும் JioBharat V4 மொபைல்களில் ஆரம்ப விலை ரூ.1,099. இந்தப் புதிய 4G  ஃபீச்சர் போன்கள் விரைவில் அமேசான், ஜியோ மார்ட் மற்றும் பிற ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பயனர்கள் மாதத்திற்கு ரூ.123 க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 14GB டேட்டாவைப் பெறலாம்.

Latest Videos


Jio Bharat

ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஜியோ பாரத் V2 வின் வெற்றியைத் தொடர்ந்து புதிய ஜியோ பாரத் V3 மற்றும் V4 4G ஃபீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் JioBharat V3 ஸ்டைலிஷ் வடிவமைப்பைக் கொண்ட மாடலாக உள்ளது. JioBharat V4 மாடலில் செயலிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு போன்களிலும் 1,000mAh பேட்டரி, 128GB வரை நீட்டிக்கக்கூடிய மெமரி ஆகியவை உள்ளன. இந்த போனை 23 இந்திய மொழிகளில் பயன்படுத்த முடியும்.

Jio basic phones with JioPay

JioTV செயலியும் இந்த பேசிக் போன்களில் இருக்கிறது. இதில் பொழுதுபோக்கு, சிறுவர் நிகழ்ச்சிகள், செய்திகள் என பல வகைகளில் 455 க்கும் மேற்பட்ட நேரடி லைவ் சேனல்களை ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கலாம். படம் பார்க்க ஜியோ சினிமாவும் உள்ளது. JioBharat V3 மற்றும் V4 இரண்டிலும் 4G அம்சம் உள்ளன. JioChat மூலம் பயனர்கள் வாய்ஸ் மெசேஜ், புகைப்படங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம். குழுக்களையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

Reliance Jio

ரிலையன்ஸ் ஜியோவின் சமீபத்திய JioBharat V3 மற்றும் V4 ஃபீச்சர் போன்களும் JioPay அப்ளிகேஷனைக் கொண்டுள்ளன. இதை பயன்படுத்த UPI முறையில் பணம் செலுத்தலாம் அல்லது பெறலாம். இதில் உள்ள சவுண்ட்பாக்ஸ் அம்சம் பரிவர்த்தனைகள் குறித்த தகவலை சத்தமாக படித்துக் காட்டும்.

click me!